பாஜக எம்.பி கே.லட்சுமன்
புதுடெல்லி: மாநிலங்களவையின் ஜீரோ நேரத்தில் பாஜக எம்.பி கே.லட்சுமன் நேற்று பேசியதாவது: தமிழகம், கேரளா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
மதத்தின் பெயரால் ஒபிசி இட ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுகிறது. இடஒதுக்கீட்டு கொள்கை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்குவது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக உயர் நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. எனவே மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.