இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐந்து மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவுக்​குப் பிறகு பெட்​ரோல், டீசல் விலையை உயர்த்​தும் எந்​தத் திட்​ட​மும் இல்லை என மத்​திய பெட்​ரோலி​ய அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி​யுள்​ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டு சர்​வ​தேச சந்தை​யில் கச்சா எண்​ணெய் விலை பேரலுக்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை ஏற்ற இறக்​கத்​துடன் காணப்படுகிறது. இதனால் உலகின் பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை அதி​கரித்​தது.

ஆனால், இந்​தி​யா​வில் மட்​டும் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிந்த பிறகு பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்​தப்​படலாம் என கோடக் பங்​கு​கள் நிறு​வனம் அறிக்கை வெளி​யிட்​டிருந்​தது.

இதுகுறித்து பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை வாயு அமைச்​சகம் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட தகவலில் கூறி​யிருப்​ப​தாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்த்​தப்​படும் என சில தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இது போன்ற திட்​டம் எது​வும் மத்​திய அரசிடம் இல்​லை. மக்​கள் இடையே பீதியை ஏற்​படுத்​து​வதற்​காக இது​போன்ற தவறான தகவல்​கள் பரப்​பப்​படு​கின்​றன.

கடந்த 4 ஆண்​டு​களில் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​ப​டாத ஒரே நாடு இந்​தி​யா​ தான். சர்​வ​தேச சந்​தை​யில் ஏற்​பட்​டுள்ள கச்சா எண்​ணெய் விலை உயர்​வால், இந்​திய மக்​களை பாதுகாப்பதற்கு தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசும், பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​களும் எடுத்​துள்​ளன. இவ்வாறு பெட்​ரோலி​ய அமைச்​சகம்​ தெரி​வித்​து உள்​ளது.

SCROLL FOR NEXT