புதுடெல்லி: வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு ‘கர்த்தவ்ய பாதையில்' நடைபெற உள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவரின் செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பாசறைக்கு திரும்புதல் விழாக்கள் காரணமாக ஜனவரி 21 முதல் 29 வரை குடியரசுத் தலைவர் மாளிகையை (சர்க்யூட்-1) பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை’’ என கூறப்பட்டுள்ளது.