இந்தியா

பால திறப்பு விழாவுக்கு தேஜஸ்விக்கு அழைப்பில்லை: பிரதமரின் போஸ்டரை கிழித்து ஆர்ஜேடி போராட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ராகோபூரில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்ட ரூ.4,280 கோடி மதிப்பிலான தொங்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இவ்விழாவில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவுக்கு ராகோபூர் தொகுதி எம்எல்ஏவான தேஜஸ்விக்கு அழைப்பு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆர்ஜேடி கொடிகளை ஏந்திய தொண்டர்கள், தேஜஸ்வி, லாலு யாதவுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி பாலத்தில் அணிவகுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர், முதல்வரின் பேனர்களைக் கிழித்த போராட்டக்காரர்கள், பாஜக கொடிகளையும் சேதப்படுத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

பாலத்துக்கு முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயரைச் சூட்டியதையும் தேஜஸ்வி விமர்சித்தார். உயிருடன் இருப்பவரின் பெயரைச் சூட்டுவது, நிதிஷ் குமார் “அரசியல் ரீதியாக முடிந்துவிட்டார்” என்பதைக் காட்டுவதாக அவர் கூறினார். நினைவுச் சின்னங்கள் மறைந்த தலைவர்களுக்கே உரியவை என்றும் அவர் தெரிவித்தார்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT