இந்தியா

தொடர்ச்சியாக 12 மாதங்களில் பணியின்போது உயிரிழப்பு ஏற்படவில்லை: சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் துணை ராணுவப் படைகளில் ஒன்​றான சிஆர்பிஎப், கடந்த 12 மாதங்​களாக பணி​யின்​போது எவ்​வித உயிரிழப்​பும் இன்றி செயல்​பட்டு சாதனை படைத்​துள்​ளது. இதற்காக சிஆர்பிஎப் படை வீரர்​களுக்கு எனது பாராட்​டுகள் என்று பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

இது​தொடர்​பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று, “தொடர்ச்​சி​யாக 12 மாதங்​களாக சிஆர்பிஎப் படை​யில், பணியின்​போது எவ்​வித உயி​ரிழப்​பும் ஏற்​பட​வில்லை. கடந்த 47 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இந்த ‘பூஜ்​யம்’ பல விஷயங்களை நமக்கு உணர்த்து​கிறது” என பதி​விட்​டுள்​ளார். இந்தப் பதி​வில், ‘பூஜ்​யம்’ என்ற எண்​ணுடன், சிஆர்பிஎப் வீரர்​கள் மூவர் வெவ்​வேறு திசைகளை நோக்கி துப்​பாக்​கி​களை ஏந்தியிருக்​கும் ஒரு புகைப்படமும் இடம்​பெற்​றுள்​ளது.

சிஆர்பிஎப் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “சிஆர்பிஎப் வீரர்கள் தாங்​கள் பணி​யமர்த்​தப்​பட்​டுள்ள பல்​வேறு மோதல்களங்களில், தொடர்ந்து தீவிர​மான நட​வடிக்​கைகளை மேற்​கொண்ட போதிலும், இந்த சாதனையை எட்​டியுள்​ளோம். நாட்​டின் வன்​முறை அதி​கம் நிறைந்த பல பகுதி​களில் சிஆர்​பிஎப் வீரர்​கள் உள்நாட்டு பாது​காப்​புப் பணிகளை மேற்​கொண்டு வருகின்​றனர். துரதிரு​ஷ்ட​வசமாக, கடந்த பல ஆண்​டுகளாக இதில் அதிக உயிரிழப்​பு​கள் ஏற்​பட்டு வந்​தன.

தற்​போது, கடந்த 12 மாதங்​களாக ஒரு வீரர் அல்​லது அதி​காரி கூட உயி​ரிழக்​க​வில்லை என்​பது, பாது​காப்பு சூழல் மேம்பட்டுள்ளதையும், இந்​தப் படை தனது கடந்​தகால தவறுகளில் இருந்து பாடம் கற்​றுக்​கொண்டு முன்​னேறியுள்​ளதையும் காட்டுகிறது” என்​றார்.

சுமார் 3.25 லட்​சம் வீரர்​களைக் கொண்ட சிஆர்​பிஎப், நாட்​டின் உள்நாட்டு பாது​காப்​பில் முக்​கியப் பங்​காற்றி வரு​கிறது. குறிப்பாக, நக்​சல் எதிர்ப்பு நட​வடிக்​கைகள், ஜம்மு-காஷ்மீரில் தீவிர​வாத எதிர்ப்பு நட​வடிக்​கைகள் மற்​றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்​புப் பணிகள் ஆகிய​வற்​றில் இந்தப் படை ஈடு​பட்டு வரு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT