நிதிஷ் குமாருடன் மகன் நிஷாந்த் குமார்

 
இந்தியா

நிதிஷ் மகன் நிஷாந்த் குமார் ஜேடியு கட்சியில் இணைந்தார் - துணை முதல்வராக்க கட்சியினர் ஆதரவு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யில் (ஜேடி​யு) உறுப்​பின​ராக நேற்று சேர்ந்​தார். அவரை துணை முதல்​வ​ராக்க கட்சி எம்​எல்​ஏ.க்​கள், எம்​.பி.க்​கள் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்படுகிறது.

பிஹாரில் கடந்​தாண்டு நடை​பெற்ற சட்டப்பேரவை தேர்​தலில், தே.ஜ.கூட்​டணி அமோக வெற்றி வெற்றது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பிஹார் முதல்வரானார். இந்​நிலை​யில் நிதிஷ் குமாரின் உடல் நிலை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் தனது மகன் நிஷாந்த் குமாரை ஐக்கிய ஜனதா தள கட்​சி​யில் அடுத்த வாரி​சாக கொண்​டுவர முடிவு செய்​தார்.

          

இது குறித்து பாஜக.,வுடன் ஆலோ​சனை நடத்​தி​னார். நிதிஷ் குமார் மாநிலங்​களவை எம்​.பி. தேர்​தலில் போட்​டி​யிட​வும், அவரது மகன் நிஷாந்த் குமாரை ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யில் இணைத்து துணை முதல்​வ​ராக்​க​வும், முதல்​வர் பதவியை பாஜக.வுக்கு விட்டுத்​தர​வும் முடிவு செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து அவர் மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிட மனு தாக்​கல் செய்​தார்.

இந்​நிலை​யில், அரசி​யலில் இருந்து விலகி இருந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யில் நேற்று உறுப்​பின​ராக இணைந்​தார். அப்​போது கட்​சி​யின் செயல் தலை​வரும், மாநிலங்​களவை எம்​.பி.​யு​மான சஞ்​சய் ஜா, பிஹார் துணை முதல்​வர் விஜய் சவுத்ரி மற்​றும் மூத்த தலை​வர்​கள் உடன் இருந்தனர். முதல்​வர் நிதிஷ் குமார் இந்​நிகழ்ச்​சி​யில் பங்கேற்கவில்லை.

நிஷாந்த் குமார் கட்​சி​யில் இணைந்​ததும், இளைஞர் அணி​யினர் கோஷமிட்​டனர். கட்​சி​யில் இணைந்த பின், தலை​மையகத்​துக்கு வெளியே உள்ள ஜெயப்​பிர​காஷ் நாராயண் சிலைக்கு நிஷாந்த் குமார் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். அதன்​பின் பேட்​டியளித்த நிஷாந்த் குமார், ”கட்​சி​யில் தீவிர உறுப்​பின​ராக பணி​யாற்​றி, கட்சி நலனை பாது​காப்​பேன். மாநிலங்​களவை தேர்தலில் போட்​டி​யிட எனது தந்தை எடுத்த முடிவை மதிக்கிறேன்” என்​றார்.

இது குறித்து கட்​சி​யின் மூத்த தலை​வர் ஹரி நாராயண் சிங் கூறுகை​யில், ”கட்​சி​யின் முன்​னணி தலை​வர்​கள் பங்​கேற்ற கூட்டத்​தில், நிஷாந்த் குமாரைத் துணை முதல்​வ​ராக்​கும் வாய்ப்புகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. நிதிஷ் குமார் தலைமை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், நிஷாந்த் குமாரை துணை முதல்​வ​ராக்க கட்​சி​யின் எம்​எல்​ஏ.க்​கள் மற்​றும்​ எம்​.பி.க்​கள்​ அனை​வரும்​ ஒரு​மன​தாக முடிவு செய்​தனர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT