நிதிஷ் குமார்

 
இந்தியா

முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ்?

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்

செய்திப்பிரிவு

பாட்னா: வரும் மாநிலங்​களவை தேர்​தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்​களில் வெற்றி பெறும் நிலை​யில் உள்​ளது. இதில் ஒன்​றில் மத்திய அமைச்சர் ராம்​நாத் தாக்​கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்​றொரு இடத்துக்கு இன்​னும் வேட்​பாளர் உறுதியாகவில்​லை.

இந்​நிலை​யில் நிதிஷ் குமார் முதல்​வர் பதவியி​லிருந்து வில​கி, மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிடு​வார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் எனவும் பாஜகவை சேர்ந்த ஒரு​வர் அடுத்த முதல்​வ​ராக பதவியேற்பார் எனவும் அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இது தொடர்​பாக பாஜக மற்​றும் ஐக்​கிய ஜனதா தள உயர்​மட்ட தலை​வர்​கள் மத்​தி​யில் ரகசிய கூட்​டம் நடந்​து ​வரு​கிறது.

          

நிதிஷ் குமாரை மாற்​றும் நடவடிக்கை 2025 சட்​டப்​பேரவை தேர்தலுக்கு முன்பே எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் நிதிஷ் குமாரின் சாதனை​களை கருத்​தில் கொண்டு அவசர கதி​யில் அந்த நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. 75 வயதான நிதிஷ் குமார், 10 முறை முதல்​வ​ராக பதவி​யேற்று சாதனை படைத்துள்ளார். பிஹாரில் என்​டிஏ அல்​லது மகா கூட்​டணி என அவர் எதில் இருந்​தா​லும் தேர்​தல் பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்​துச் சென்​றுள்​ளார்.

கடந்த 2025ல் அவரது அரசுக்கு எதி​ரான அலை வீசுவ​தாக கூறப்பட்​ட​போது, பெண்​களுக்கு நிதி​யுத​வி, பள்ளி மாணவிகளுக்கு சைக்​கிள், மது ​விலக்கு போன்ற திட்​டங்​களால்​ நிதிஷ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே இத்தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிடுகிறாரா என்பது இன்று தெரியவரும்.

SCROLL FOR NEXT