இந்தியா

மும்பையில் ரூ.314 கோடியில் பிஹார் பவன் 30 மாடி கட்டிடம் கட்டுகிறது நிதிஷ் அரசு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் ​மும்​பை​யில் பிஹார் அரசு ரூ.314 கோடி செல​வில் நவீன 30 மாடிக் கட்​டிடம் கட்ட உள்​ளது. டெல்லி சாணக்​யபுரி​யில் பிஹார் அரசுக்கு சொந்த​மாக ‘பிஹார் சதன்’ எனும் பெயரில் ஒரு கட்​டிடம் உள்​ளது. இது, தமிழக அரசின் தமிழ்​நாடு இல்​லத்​துக்கு அரு​கில் அமைந்​துள்​ளது.

பிஹார் சதனில் அம்​மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் பொது​மக்​கள் தங்​கிச் செல்​கின்​றனர். இதே​போன்ற வசதி​களுக்​காக மும்​பை​யிலும் பிஹார் அரசு நவீன 30 மாடிக் கட்​டிடம் கட்ட உள்​ளது. இதற்​காக முதல்​வர் நிதிஷ்கு​மார் தலை​மையி​லான அமைச்​சரவை நேற்று ரூ.314.20 கோடி ஒதுக்​கியது.

பிஹாரிலிருந்து பல்​வேறு பணி​களுக்​காக அம்​மாநில மக்கள் மும்​பை வரு​கின்​றனர். பிஹாரில் நவீன மருத்​துவ சிகிச்​சைகள் குறைவு. இதற்​காக பிஹார்​வாசிகள் டெல்​லி, மும்பை மற்​றும் மேற்கு வங்​கத்​துக்கு செல்ல வேண்டிள்ளது. இதனால் சிகிச்​சைக்​காக மும்​பைக்கு அதிகம் வரு​கின்​றனர். இவர்​களுக்​கும் இவர்​களின் குடும்பத்​தினருக்​கும் இந்​தக் கட்​டிடம் மிக​வும் பயனுள்ளதாக இருக்​கும் என நிதிஷ் குமார் அரசு கருதுகிறது.

மும்பை துறை​முக அறக்​கட்​டளை அதி​கார வரம்​புக்கு உட்பட்ட எல்ஃபின்​ஸ்​டோன் எஸ்​டேட் பகு​தி​யில் சுமார் 0.68 ஏக்​கர் நிலத்​தில் இது கட்​டப்பட உள்​ளது. இக்​கட்​டிடம், நவீன நகர வடிவ​மைப்​புக்கு ஒரு சிறந்த உதா​ரண​மாகத் திகழும். அடித்​தளத்​துடன் சேர்த்து சுமார் 30 தளங்​கள் கொண்ட இந்​தக் கட்​டிடம், தரை​யில் இருந்து சுமார் 69 மீட்டர் வரை உயர்ந்து நிற்​கும்.

இந்​தக் கட்​டிடம் அரசுப் பணி​கள் மற்​றும் கூட்​டங்​களுக்​கான வசதி​கள் மற்​றும் அலு​வலர்​களுக்​காக குடியிருப்புகளை கொண்​டிருக்​கும். மேலும் பிஹாரை சேர்ந்த நோயாளி​கள், அவர்​களின் குடும்​பத்​தினருக்​காக 240 படுக்​கைகள் கொண்ட தங்​குமிட​மும் இடம்​பெறும். குறைந்த செல​வில் பாது​காப்​பான, வசதி​யான தங்​குமிடத்தை இது வழங்​கும். இது பிஹார் மக்​களுக்கு மிகவும் பயனுள்​ள​தாக இருக்​கும்.

மும்​பையை போன்று தமிழ்​நாட்​டுக்​கும் பிஹார்​வாசிகள் அதி​க​மாக வந்து செல்​கின்​றனர். இதனால் தமிழ்நாட்​டிலும் விரை​வில் ஒரு பிஹார் பவனை அமைக்க நிதிஷ் குமார் அரசு திட்​ட​மிடு​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT