நிர்​மலா சீதா​ராமன்

 
இந்தியா

“கடன் சுமை பற்றி காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது” - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மாநிலங்களவை​யில் நேற்று பேசி​ய​தாவது: "நாட்​டின் பொருளாதா​ரம் வலு​வாக இருக்​கிறது. பண வீக்​கம் குறைந்து வருகிறது. அபரித​மான பொருளா​தார வளர்ச்​சிக்கு சாதக​மான சூழல் நில​வு​கிறது.

தனி​ நபர் வரு​மான வரி வசூல் கணிச​மாக உயர்ந்​துள்​ளது. நடுத்தர வர்க்க மக்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால் வரி வசூல் அதி​கரித்து வரு​கிறது. நடுத்தர வர்க்க மக்​கள் மீது வரி சுமை​கள் சுமத்​தப்​பட​வில்​லை. நாட்​டின் கடன் சுமை அதி​கரித்து வரு​வ​தாக காங்​கிரஸ் கட்சி முதலைக் கண்​ணீர் வடிக்​கிறது. அளவுக்கு அதி​க​மாக மத்​திய அரசு கடன் வாங்​க​வில்​லை. கடன் அளவு கட்​டுக்​குள் உள்​ளது.

கடந்த காங்​கிரஸ் கூட்​டணி ஆட்​சிக் காலத்​தில் வேலை ​வாய்ப்பின்மை சதவீதம் அதி​க​மாக இருந்​தது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் வேலை​ வாய்ப்​பு​கள் பெருகி வரு​கின்​றன. வரும் 2047ம் ஆண்​டுக்​குள் உலக சந்​தை​யில் 10 சதவீதத்தை கைப்​பற்ற மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. மத்​திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முழு​மை​யாக நிறைவேற்ற வேண்டும். இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன்​ பேசி​னார்​.

          
SCROLL FOR NEXT