இந்தியா

“நேரு காட்டிய பாம்பு... ஏஐ காட்டும் பிரதமர்...” - நிஷிகாந்த் ஒப்பீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​பாஜக மூத்த தலை​வர் நிஷி​காந்த் துபே தனது எக்ஸ் பக்​கத்​தில் ஒரு புகைப்​படத்தை பதிவேற்​றம் செய்​துள்​ளார்.

அதனுடன் வெளி​யிட்டுள்ள பதி​வில், “காங்​கிரஸ் பிரதமர் நேரு உலகத்​துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்) காட்​டி​னார், பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி உலகத்​துக்கு தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை எடுத்​துக் காட்டுகிறார்.

கோபம் வரத்​தானே செய்​யும்? இந்​தப் படம் 1962ல் அப்​போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்​குலினை நேரு வரவேற்​ற​போது எடுத்​தது” என்று கூறி​யுள்​ளார்​.

          
SCROLL FOR NEXT