புதுடெல்லி: அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட டெல்லி சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் முன் ஆஜராகுமாறு அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போராவுக்கு டெல்லி காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நேஹா போராவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், பி.என்.எஸ்.எஸ் சட்டப் பிரிவு 135 தொடர்பான விவகாரத்தை சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.