இந்தியா

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததால் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: சிபிஐ தீவிர விசாரணை

கேரளா, மகாராஷ்டிராவில் மாணவர்கள் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வி​னாத்​தாள் கசிந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால், மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நடை​பெற்​றது. மொத்​தம் 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள் இந்த தேர்வை எழு​தினர். இந்​தச் சூழலில் நீட் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்​தான் போலீ​ஸார் இணைந்து நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு மாநிலங்​களில் வினாத்​தாள் கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​வ​தாக தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

இதுதொடர்​பாக என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவி​லான தேர்​வு​களை நேர்​மை​யாக​வும், நம்​பகத்​தன்​மை​யுட​னும் நடத்த என்​டிஏ உறுதி பூண்​டிருக்​கிறது. நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களைக் கேட்​டுக் கொண்​டோம். அந்த அமைப்​பு​கள் விசா​ரணை நடத்தி என்​டிஏ​விடம் விரி​வான அறிக்​கையை சமர்ப்​பித்​தன. அதன் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மறு​தேர்வு தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும்.

நீட் மறு​தேர்​வுக்​குப் புதி​தாக ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களைச் சமர்ப்​பிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தேர்​வுக் கட்​ட​ண​மும் செலுத்த வேண்​டாம். ஏற்​கெனவே செலுத்​திய தேர்​வுக் கட்​ட​ணம் திரும்ப வழங்​கப்​படும். என்​டிஏ-​வின் சொந்த நிதி​யில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மாணவ, மாணவி​கள் ஏற்கெனவே எழு​திய தேர்வு மையங்களில் மறு​தேர்வு நடத்​தப்​படும். மறு​தேர்​வுக்​கான தேதி, ஹால் டிக்​கெட் குறித்து என்​டிஏ சார்பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படும்.

மேலும் விவரங்​களுக்கு neet-ug@nta.ac.in இ-மெ​யில் முகவரி மற்​றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

தேசிய தேர்வு முகமை தலை​வர் சுபோத் குமார் சிங் கூறும்​போது, “மாணவ, மாணவி​களின் எதிர்​காலத்​தைப் பாழாக்க ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம். முறை​கேடு​களில் ஈடு​படு​பவர்​கள் அகற்​றப்​படு​வார்​கள். வலு​வான பாது​காப்பு நடை​முறை​களோடு நீட் மறு​தேர்வு நடத்​தப்​படும். இதுதொடர்​பாக விரை​வில் விரி​வான வழி​காட்டு நெறிகள் வெளி​யிடப்​படும். இதன்​மூலம் எதிர்​காலத்​தில் தவறுகள் நடை​பெறு​வது தடுக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்.

நீட் மறு​தேர்வு குறித்து என்​டிஏ வட்​டாரங்​கள் கூறும்​போது, “வி​னாத்​தாள் கசிவு காரண​மாகவே நீட் மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது. பாடத்​திட்​டம், வி​னாத்​தாள், தேர்வு நேரத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. மே மாத இறுதி அல்​லது ஜூன்​ மாதத்​தில்​ மறு​தேர்​வு நடத்​தப்​படக்​ கூடும்​" என்​று தெரிவித்​தன.

ரூ.100 கோடி வரை… நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ நேற்று வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணையை தொடங்கி உள்​ளது. இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

நீட் தேர்​வுக்​கான வினாத்​தாளை அச்​சடித்த அச்​சகம் அல்​லது வாக​னங்​களில் வினாத்​தாள் கொண்டு செல்​லப்​பட்ட போது வினாத்​தாள் கசிந்​திருக்​கக் கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். முதல் வினாத்​தாளை வழங்​கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

வினாத்​தாள் சில இடங்​களில் ரூ.28 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்பட்டு உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்​யப்​பட்டு இருப்​ப​தாகத் தெரி​கிறது.

இந்த வழக்​கில் இது​வரை கைதானவர்​களில் பெரும்​பாலானோர் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள். கேரளா​வில் மருத்​து​வக் கல்​லூரி மாணவர் பிடிபட்டு உள்​ளார். இதே வழக்​கில் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக்​கில் சுபம் காரி​னார் என்​பவர் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர் போபாலில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் பயின்று வரு​கிறார். ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கேரளா, உத்தராகண்ட் உள்​ளிட்ட பல மாநிலங்​களின் போலீ​ஸாரிடம் இருந்து ஆதா​ரங்​களைப் பெற்று முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​படும். தவறு செய்​தவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்​வேறு மாணவர் சங்​கங்​கள் சார்​பில் டெல்​லி​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

டெல்லி மட்​டுமன்றி பாட்​னா, கோட்​டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்​வேறு நகரங்​களி​லும்​ நேற்​று போ​ராட்​டங்​கள்​ நடத்தப்பட்டன.

SCROLL FOR NEXT