இந்தியா

நீட் தேர்வு விண்ணப்ப தொகை திரும்பப் பெற வங்கிக் கணக்குகளை மே 27 வரை பதிவேற்றலாம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு விண்​ணப்​பத் தொகை​யைத் திரும்​பப் பெற தேர்​வர்​கள் தங்​களது வங்கி விவரங்​களை மே 27 வரை பதிவேற்​றலாம் என்று தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) அறி​வித்​துள்​ளது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு காரண​மாக இந்த மாதம் 3-ம் தேதி நடை​பெற்ற நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது. இதையடுத்து புதிய தேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடை​பெறும் என்று என்​டிஏ அறி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் 2026 நீட் தேர்​வர்​களுக்​காக ஒரு புதிய இணை​யதளத்தை நேற்று முன்​தினம் என்​டிஏ தொடங்​கி​யுள்​ளது. தேர்​வர்​கள் தங்​களது தேர்வு விண்​ணப்​பத் தொகை​யைத் திரும்​பப் பெறு​வதற்​காக அந்த இணை​யதளத்தை அணுகி தங்​களது வங்கி விவரங்​களை வரும் 27-ம் தேதி வரை பதிவேற்​றலாம்.

வரும் 27-ம் தேதி இரவு 11.50 மணி வரை தேர்​வர்​கள் தங்​களது வங்கி விவரங்​களை பதிவேற்ற முடி​யும். அந்த இணை​யதளத்​தில் தேர்​வர்​களின் பெயர் விவரம், வங்​கி​யின் பெயர், வங்​கிக் கணக்கு எண், ஐஎஃப்​எஸ்சி கோட், ரத்து செய்​யப்​பட்ட வங்​கிக் காசோலை (ஸ்​கேன் செய்​யப்​பட்ட நகல்) ஆகிய​வற்றை அதில் பதிவு செய்ய வேண்​டும்.

வரும் 27-ம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்​றப்​படும் தகவல்​களே இறு​தி​யானவை என்று என்​டிஏ அறிவிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT