மும்பை: பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான ரோஹித் பவார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். அந்த விமானம் விஎஸ்ஆர் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
அந்த நிறுவனத்துக்கும், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கும் தொடர்புகள் உள்ளன. எனவே, அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.