வாராணசி: ஜார்க்கண்டை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் மூத்த தளபதி பிரிஜேஷ் கஞ்சு, உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் தீவிரவாதத் தடுப்புப் படை துணைக் காவல் கண்காணிப்பாளர் விபின் ராய்,் தலைமைக்காவலர் நிதேந்திர கிருஷ்ணா மீது குண்டுகள் பாய்ந்தன. எனினும் அவர்கள் அணிந்திருந்த புல்லட் புரூஃப் உடை காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல் மீது தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.