இந்தியா

விவசாயிகள் சுரண்டலை தடுக்க நவீன் பட்நாயக் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜிக்​கு, முன்னாள் முதல்​வர் நவீன் பட்​நாயக் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது: விவ​சா​யிகள், கொள்​முதல் மண்​டிகளில் சுரண்​டப்​படு​கின்​றனர்.

தடையற்ற கொள்​முதல் என நீங்​கள் வாக்​குறுதி அளித்​தீர்​கள். ஆனால், நெல்​லின் ஈரப் ​ப​தம் மற்​றும் தரத்தை காரணம் காட்டி குவிண்​டாலுக்கு 7 கிலோவை பிடித்​தம் செய்​கின்​றனர். மில் உரிமை​யாளர்​கள், உள்​ளூர் அதி​காரி​கள் துணை​யுடன் இந்த சுரண்​டல் நடை​பெறுகிறது. இதன் மூலம் குறைந்த வரு​வாயை பெறும் நிலைக்கு விவ​சா​யிகள் தள்​ளப்​படு​கின்​றனர்.

இதைத் தடுக்க வேண்டும். விவ​சா​யிகள் சந்​திக்​கும் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் விவ​சா​யிகள் மாநிலம் முழு​வதும் போ​ராட்​டத்​தில் இறங்​கு​வர்​. இவ்​வாறு நவீன்​ பட்​நாயக்​ கூறியுள்ளார்​.

          
SCROLL FOR NEXT