National

ஆந்திராவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கடப்பா: ஆந்திரவின் கடப்பா மாவட்டம் புலிவேந்துலா தொகுதி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியாகும்.

இங்கு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரத் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆடு வியாபாரி திலீப் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பரத்குமார் துப்பாக்கியால் திலீப்பை நோக்கி சுட்டார். அப்போது திலீப்பை காப்பாற்ற வந்த முகமது பாஷாவையும் சுட்டு விட்டு தப்பிவிட்டார். இதில் திலீப் உயிரிழந்தார். படுகாயமடைந்த முகமது பாஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT