இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்​திரி​கையை நடத்​திய ஏஜேஎல் நிறு​வனத்தை யங் இந்​தியா நிறு​வனம் வாங்​கியது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் இயக்​குநர்​களாக உள்​ளனர். இதில் முறைகேடு நடந்ததாக சுப்​பிரமணி​ய​சாமி கடந்த 2014-ம் ஆண்டு புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில் அமலாக்​கத் ​துறை விசாரணை நடத்தி குற்​றப் பத்திரிகையை தாக்​கல் செய்​தது.

எப்​.ஐ.ஆர் இல்​லாமல் தனி​நபர் புகார் அடிப்​படை​யில் பதிவு செய்​யப்​பட்ட இந்த வழக்​கின் குற்​றப்​பத்​திரி​கையை ஏற்க முடி​யாது என டெல்லி சிறப்பு நீதி​மன்​றம் கூறி​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு தடை கோரி டெல்லி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் அமலாக்​கத்​துறை மனு ​தாக்​கல் செய்​துள்​ளது.

அதில் ரூ.752 கோடி மதிப்​பிலான சொத்​து முடக்​கப்​பட்​டுள்ள இந்த மோசடி வழக்கில், இழப்பை தடுக்க இந்த தடை அவசி​யம் எனவும், தனி​நபர் புகார் என்​ப​தால், குற்​றம் புரிந்​தவர்​கள் மீது வழக்கு தொடர முடி​யாது என்​பது விரோத​மான தீர்ப்பு எனவும் அமலாக்​கத்​துறை கூறி​யுள்​ளது.

SCROLL FOR NEXT