இந்தியா

நாசிக் டிசிஎஸ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண் ஊழியரை மலேசியாவுக்கு கடத்த சதி செய்தது அம்பலம்

செய்திப்பிரிவு

நாசிக்: நாசிக்​கில் உள்ள டிசிஎஸ் நிறு​வனத்​தில் பணியாற்றிய பெண் ஊழியர்​களை மத மாற்​றம் செய்ய முயன்ற விவ​காரத்​தில், பாதிக்​கப்​பட்ட பெண்ணை மலேசியா​வுக்கு கடத்த சதித் திட்​டம் தீட்டப்​பட்​டது தெரியவந்துள்ளது.

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக்​கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்​தில் பணி​யாற்​றும் பெண்​களுக்கு பாலியல் வன்​கொடுமை மற்​றும் மதம் மாற வற்​புறுத்​தப்​படு​வ​தாக பல்​வேறு புகார்​கள் எழுந்​தன.

இதையடுத்து, காவல் துறை இதுதொடர்​பாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது. இந்த வழக்​கில் முக்​கியக் குற்றவாளியாகக் கருதப்​படும் நீடா கான், டிசிஎஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய சக பெண் ஊழியரின் பெயரை `ஹனி​யா' என மாற்ற வற்​புறுத்​தி​யதோடு, அவரை இஸ்லாம் மதத்துக்கு மாறும்​படி மிரட்டிய​தாக​வும் கூறப்படு​கிறது.

மேலும், வேலை​வாய்ப்பு என்ற பெயரில் பாதிக்​கப்​பட்ட பெண்ணை மலேசி​யா​வுக்கு அனுப்​பி, அங்கு இம்​ரான் என்​பவரிடம் ஒப்​படைக்க சதித் திட்​டம் தீட்​டப்​பட்​டது விசா​ரணை​யின்போது தெரிய​வந்​துள்​ளது. பாதிக்​கப்​பட்ட பெண் பட்​டியல் இனத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தால், இந்​தக் கொலை மிரட்​டல் மற்​றும் மதமாற்ற முயற்சி வழக்​கில் எஸ்​சி, எஸ்டி (வன்​கொடுமை தடுப்​பு) சட்​டப் பிரிவு​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

மதமாற்​றம் செய்​யும் நோக்​கத்​துடன் பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு நீடா கான் புர்கா மற்​றும் இஸ்​லாமிய மத நூல்​களை வழங்​கி​யுள்​ளார். அவற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர். அந்​தப் பெண்​ணின் செல்​போனில் சில மத ரீதி​யான செயலிகளை நிறு​வியதுடன், யூடியூப் மற்​றும் இன்​ஸ்​டாகி​ராம் வாயி​லாகத் தொடர்ந்து மதப் பிரச்​சார வீடியோக்​களை அனுப்பி நீடா கான் மூளைச்​சலவை செய்ய முயன்​றதும் விசா​ரணை​யில் அம்​பல​மாகி உள்​ளது.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள நீடா கானின் சகோ​தரர் டேனிஷ் ஷேக் மீது பாலியல் வன்​கொடுமை புகார் பதி​வாகி​யுள்​ளது. ஏற்​கெனவே திரு​மண​மான டேனிஷ் ஷேக், அதை மறைத்​துப் பாதிக்​கப்​பட்ட பெண்​ணைத் திரு​மணம் செய்​து​கொள்​வ​தாக ஆசை காட்டி பாலியல் ரீதி​யாகத் துன்​புறுத்​தி​யுள்​ளார். உண்மை தெரிந்​தவுடன், அந்​தப் பெண்ணை மலேசி​யா​வுக்கு அனுப்​பி​விடு​வ​தாகக் கூறி மிரட்​டி​யுள்​ளனர்.

இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்​தவுடன் நீடா கான் தலைமறை​வாகி​விட்​டார். தான் கர்ப்​ப​மாக இருப்​ப​தாகக் கூறி அவர் தாக்​கல் செய்த முன்​ஜாமீன் மனுவை நீதி​மன்​றம் கடந்த வாரம் தள்​ளு​படி செய்​தது. அவரது செல்​போனைப் பறி​முதல் செய்து டிஜிட்​டல் ஆதா​ரங்​களைச் சேகரிக்க போலீ​ஸார் தீவிர முயற்சி மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இது​வரை 7 பெண்​கள் மற்​றும் ஒரு ஆண் என மொத்​தம் 8 பேர் புகார் அளித்​துள்​ளனர். இதன் அடிப்​படை​யில் 8 தனித்​தனி வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பாக7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், நீடா கான் உள்​ளிட்ட அனை​வரை​யும் டிசிஎஸ்​ நிர்​வாகம்​ பணி​யிடை நீக்​கம்​ செய்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT