இந்தியா

நாசிக் டிசிஎஸ் மதமாற்ற வழக்கு: திடீரென பணி விலகிய ஊழியர்களிடம் மீண்டும் எஸ்ஐடி தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்​தின் பிபிஓ அலு​வல​கம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனத்​தில் பெண் ஊழியர்​களை அதி​காரி​கள் மிரட்டி பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் மதம் மாற கட்​டாயப்​படுத்​தி​யாக புகார் எழுந்​துள்​ளது.

கடந்த 2022 பிப்​ர​வரி முதல் 2026 மார்ச் வரை நடந்​த​தாக கூறப்​படும் இந்த குற்​றங்​கள் தொடர்​பாக 9 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. குழுத் தலை​வர்​கள் மற்​றும் மனிதவளத் துறை​யின் உதவிப் பொது மேலா​ளர் உட்பட 8 ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். முக்​கிய குற்​ற வாளி​யாக கருதப்​படும் பெண் அதி​காரி நீடா கான் தலைமறை​வாக இருக்​கும் நிலை​யில் அவரை கைது செய்ய 3 தனிப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் 2022 மற்​றும் 2024-க்கு இடையில் திடீரென பதவி வில​கிய முன்​னாள் ஊழியர்களிடம் எஸ்​ஐடி மீண்​டும் விசா​ரணை நடத்தி வருவ​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. பாதிக்​கப்​பட்ட பெண் ஊழியர்​கள், நிறு​வனத்​தின் மனிதவளத் துறைக்கு 78-க்​கும் மேற்​பட்ட மின்​னஞ்​சல்​கள் அனுப்​பிய​தாக​வும், பலமுறை தொலைபேசி அழைப்​பு​கள் செய்​த​தாக​வும் கூறுகின்​றனர். ஆனால், எதன் மீதும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

கைதானவர்​களில் ஒரு​வ​ரான மனிதவள அதி​காரி அஸ்வினி சைனானி, பாதிக்​கப்​பட்ட பெண்​ணிடம் ‘‘இது​போன்ற விஷ​யங்​கள் நடப்​பது சகஜம்​தான்’’ என்று கூறி, புகார் அளிப்​ப​தைத் தடுத்​த​தாக​வும், இந்த விஷ​யத்தை கைவிடு​மாறு வற்​புறுத்​தி​ய​தாக​வும் குற்​றம் சாட்டப்பட்டுள்​ளார். அவர் ஏப்​ரல் 28 வரை 14 நாட்​கள் நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளார்.

அஸ்​வினி, இந்​துப் பெண் ஊழியர்​களைக் குறி​வைத்து வாட்ஸ் அப் குழுக்​களை உரு​வாக்​கி, அவர்​களின் விருப்​பத்​துக்கு எதி​ராக மதச் சடங்​கு​களில் ஈடு​படு​மாறு கட்​டாயப்​படுத்​தி​ய​தாக தெரிய​வந்​துள்​ளது. இந்த கும்​பலால் வேறு பெண்​கள் பாதிக்​கப்​பட்​டிருந்​தால் அவர்​கள் புகார் அளித்திட தனி வாட்ஸ் அப் எண்ணை போலீ​ஸார் அறிவித்துள்​ளனர். இந்த விவ​காரத்​தில் மேலும் சிலர்​ கைது செய்​யப்​படலாம்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT