இந்தியா

தினமும் வேலைக்கு செல்லும் முன் சிறுவனை சங்கிலியால் கட்டிவைத்த பெற்றோர்

செய்திப்பிரிவு

நாக்பூர்: தினக்​கூலி வேலைக்கு செல்​லும் பெற்​றோர் தங்​களின் 12 வயது மகனை, செல்​போன் திருடன் என்ற குற்​றச்​சாட்​டின் பேரில், கடந்த இரண்டு மாதங்​களாக தின​மும் பல மணி நேரம் சங்​கி​லி​யால் கட்​டிப் பூட்டி வைத்​துச் சென்​றுள்​ளனர்.

இந்த அதிர்ச்​சிகர சம்​பவம் மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் நடந்​துள்​ளது. தகவலின் பேரில் காவல்​துறை மற்​றும் மாநில பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்​டுத் துறை அதி​காரி​கள் நேற்று முன்​தினம் அந்​தச் சிறு​வனை மீட்டு அரசு குழந்​தைகள் காப்​பகத்​தில் சேர்த்​தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்​டாரங்​கள் கூறுகை​யில், “மீட்​புக் குழு​வினர் சென்​ற​போது அச்​சிறு​வன் ஒரு வாளி​யின் மீது நின்​று​கொண்​டிருந்​தான். அவனது பெற்​றோர் தின​மும் காலை 9 மணிக்கு வேலைக்​குச் செல்​லும் முன் அவனை கட்டி வைத்​து​விடு​வார்​கள். இவ்​வாறு கட்​டிய​தால் 2 முதல் 3 மாதங்​கள் பழமை​யான காயங்​கள் சிறு​வனுக்கு உள்​ளன.

அந்​தச் சிறு​வனுக்கு நடத்தை சார்ந்த பிரச்​சினை​கள் உள்​ளன. அவனது தவறான செயல்​களால், குறிப்​பாக திருட்​டுப் பழக்​கத்​தால் பெற்​றோர் மிகுந்த சிரமத்​திற்கு ஆளாகி​யிருந்​தனர்” என்று தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT