இந்தியா

“பிஹாரின் வளர்ச்சிதான் என் இலக்கு; எதிர்க்கட்சியை ஒருங்கிணைப்பது அவசியமில்லை” - பிரசாந்த் கிஷோர்

செய்திப்பிரிவு

பாட்னா: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிஹாரின் வளர்ச்சிதான் என் இலக்கு என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிஹாரின் பங்கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி பாஜக​வின் கோட்டை​யாக இருந்​தது. இந்த தொகுதி எம்​எல்​ஏ​வாக இருந்த பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் மாநிலங்​களவை எம்​பி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். இதனால் அவர் தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​த​தால் இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் ஜன் சுராஜ் கட்​சித் தலை​வர் பிர​சாந்த் கிஷோர், பாஜக வேட்​பாளர் நீரஜ் குமாரை​விட 19,000 வாக்​கு​கள் கூடு​தலாக பெற்று வெற்றி பெற்​றார்.

தேர்​தல் வெற்​றிக்​குப் பிறகு தனி​யார் செய்தி ஊடகத்​துக்​குப் அளித்த பேட்​டி​யில் பிர​சாந்த் கிஷோர் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் அரசி​யலில் நான் கடந்த மூன்று ஆண்​டு​களாக அயராது உழைத்து வரு​கிறேன். அதற்கு மக்​கள் வெகுமதி அளித்​துள்​ளனர். குறிப்​பாக சாதி மற்​றும் சமூகத்​தைத் தாண்டி வாக்​களிக்​கு​மாறு நான் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தேன். இந்த முறை அவர்​கள் அதைச் செய்​துள்​ளனர். இதற்​காக நன்றி தெரி​வித்​துக் கொள்கிறேன்.

பங்​கிபூர் மக்​கள் 3 மாதங்​களுக்​குள் ஒரு வெளிப்​படை​யான மாற்றத்​தைக் காண்​பார்​கள். இங்கு உள்​ளூர் மட்​டத்​திலான ஊழலை ஒழிப்​ப​தாக நான் வாக்​களித்​துள்​ளேன். மாநில வளர்ச்சிக்​காக தொடர்ந்து உழைப்​பேன். பிஹாருக்கு ஒரு நல்ல முதலமைச்​சரை உறுதி செய்​வது​தான் என் இலக்​கு. வேலை நிமித்த​மாக பிற மாநிலங்​களுக்கு இடம்​பெயர்​வதைத் தடுத்​து, கல்​வியை மேம்​படுத்​தி, வேலை​வாய்ப்​பு​களை வழங்​கும் ஒரு அரசு தேவை.

கல்​வித் துறையைப் பொறுத்​தவரை, எனது தொகு​தி​யில் ஒரு புதிய சோதனையைத் தொடங்​கப் போகிறேன். இங்​குள்ள அரசுப் பள்​ளி​களில் வெளிப்​படை​யான முன்​னேற்​றத்தை நான் உறுதி செய்​வேன். ஒரு​வேளை அது நடக்​க​வில்லை என்​றால், இப்பகுதியில் உள்ள ஏழைக் குழந்​தைகள் தனி​யார் பள்ளிகளுக்குச் செல்ல வசதி செய்து தரு​வேன். இப்​போது எதிர்க்கட்​சிகளை ஒருங்​கிணைக்க வேண்​டிய அவசி​யமில்​லை. எனது கவனம் பிஹாரின் வளர்ச்​சி​யில்​தான் உள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT