இந்தியா

உத்தர பிரதேசத்​தின் அலிகரில் இந்து கடவுள் சிலைகளை வடிக்கும் முஸ்லிம்கள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் அலிகர் முஸ்​லிம் பல்​கலைக்​கழகம் அமைந்​துள்ள அலிகர், அம்​மாநிலத்​தின் கல்வி நகரம் என அழைக்​கப்​படு​கிறது. அதே​போல், இங்கு பல்​வேறு வகை பித்​தளை கைவினைப் பொருட்​களும் தயாரிக்​கப்​படு​கின்​றன.

குறிப்​பாக, அலிகர் மற்​றும் அதன் அரு​கில் உள்ள முரா​தா​பாத் ஆகிய இரு நகரங்​களும் இந்து கடவுள்​களின் சிலை வடிப்​புக்கு மிக​வும் பிரபலம்.

அதி​லும் இந்து கடவுள்​களின் சிலைகளை உரு​வாக்​கு​வதும், அவற்​றுக்கு மெரு​கூட்​டு​வதும் பெரும்​பாலும் முஸ்​லிம் தொழிலா​ளர்​கள்​தான். அலிகரின் ஜெய்​கஞ்ச் அருகே உள்ள புகி சராய் பகு​தி​யில் முஸ்​லிம் கைவினைஞர்​கள் சிலைகளுக்கு மெரு​கூட்​டும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இங்கு தயா​ராகும் விநாயகர், விஷ்ணு-லட்​சுமி, ராமர் மற்​றும் கிருஷ்ணர் சிலைகள் அதி​கம் விற்​பனை​யாகின்​றன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் அப்​துல் பஹீம் கூறும்​போது, “இரண்​டாவது தலை​முறை​யாக நான் இப்​பணி​யைச் செய்​கிறேன். நாங்​கள் செய்​யும் தொழிலை இறைவ​னாகக் கருதுகிறோம். பித்​தளை​யின் விலை உயர்ந்த பிறகு பணி குறைந்​து​விட்​டது. கைவினைஞர்​களுக்கு போதிய வசதி​களை இது​வரை எந்த அரசும் செய்து தரவில்​லை” என வருத்​தத்​துடன் குறிப்​பிடு​கிறார்.

அலிகரில் சிலைகளை வடிக்​கும் ஒரு நிறு​வனத்​தைச் சேர்ந்த முகமது ஷபாப் அகமது கூறும்​போது, “எங்​கள் நிறு​வனத்​தில் ஐந்து வயது முதலே தெய்​வங்​களின் சிலைகளை மெரு​கூட்​டும் பணி​யில் ஈடு​பட்​டுள்ள பல கைவினைஞர்​கள் உள்​ளனர்” என்​றார்.

முகமது ஃபை​சான் கூறும்​போது, “பித்​தளை விலை உயர்​வால் வேலை குறைந்​து​விட்​ட​தால், தினசரி ஊதி​ய​மும் குறைந்​து​விட்​டது” என்​றார்.

7 ஆண்​டு​களாக இத்​துறை​யில் பணி​யாற்றி வரும் முகமது அர்​பாஸ், தனக்கு இன்​னும் திரு​மண​மாக​வில்லை என்​றும் வரு​மானம் அதி​கரிக்​கும்​போது திரு​மணம் செய்​து​கொள்​வேன் என்​றும் கூறுகிறார்.

உ.பி.​யில் சிலை வடிப்​பது தொடர்​பான பயிற்​சிப் பட்​டறை​களோ, கைவினைஞர்​கள் கற்​றுக்​கொள்​வதற்​கான இடமோ அல்​லது புதிய இயந்​திரங்​களைப் பயன்​படுத்​து​வதற்​கான வசதியோ எது​வும் இல்லை என்​பது அவர்​களின் ஆதங்​க​மாக உள்​ளது. தங்​கள் குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​களைப் பார்த்து தொழிலை கற்​றுக் கொள்​வ​தாக அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT