இந்தியா

​ராஜஸ்​தான் உள்ளாட்சி தேர்​தலில் பாஜக சார்பில் முஸ்லிம்கள் போட்டி

ஜெய்ப்​பூரில் அதி​க​ அளவாக 8 வேட்பாளர்கள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்​தானில் நடை​பெறும் உள்ளாட்சி தேர்​தலில் பாஜக சார்​பில் முஸ்​லிம்​களும் போட்​டி​யிடு​கின்​றனர். ஜெய்ப்​பூர் மாநக​ராட்சி தேர்​தலில் 8 முஸ்​லிம்​களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்​ளது. ராஜஸ்​தானில் 309 முனிசிபல் நகராட்சி மன்றங்​களின் 10,245 வார்​டு​களுக்கு தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​காக, 41 மாவட்​டங்​களில் இருந்து 60,894 வேட்​பாளர்​கள் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

ஜம்​மு-​காஷ்மீர் தவிர இதர மாநிலங்​களைப் போல் அன்​றி, பெரும்​பாலான மாவட்​டங்​களில் முஸ்​லிம்​களை பாஜக வேட்​பாள​ராக களமிறக்கி உள்​ளது. ஜெய்ப்​பூர் மாநக​ராட்​சி​யில் மட்​டும் மிக அதிக அளவாக 8 முஸ்​லிம்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். இவர்​கள் முஸ்​லிம் வாக்​காளர்​கள் அதி​கம் உள்ள வார்​டு​களில் போட்​டி​யிடு​கின்​றனர். இதற்கு முன்பு காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, பகுஜன் சமாஜ் உள்​ளிட்ட கட்​சிகளில் இருந்த இவர்​களுக்கு தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​க​வில்​லை.

இதையடுத்​து, கடைசி நேரத்​தில் பாஜக​வில் சேர்ந்த நிலை​யில் வேட்​பாளர்​களாக களமிறக்​கப்​பட்​டுள்​ளனர். மகளிருக்கு 33 % இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இந்த சூழலில் ராஜஸ்​தான் உள்​ளாட்​சித் தேர்​தலில் போட்​டி​யிட 35% பெண்​களுக்கு பாஜக வாய்ப்பு அளித்​துள்​ளது. ஹைத​ரா​பாத் தொகுதி எம்​.பி. அசாதுதீன் ஒவைசி​யின் அகில இந்​திய மஜ்லீஸ் எ இத்​தஹாதுல் முஸ்​லிமின் கட்​சி​யும் ராஜஸ்​தான் உள்​ளாட்​சித் தேர்​தலில் போட்​டி​யிடு​கிறது. ஆனால், அது மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சி என்​ப​தால், அதன் அதி​காரப்பூர்வ சின்னமான பட்​டம் இங்​கு கிடைக்​க​வில்​லை என்​ப​து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT