இந்தியா

இறந்த மகன் உயிர் பிழைக்க வேண்டி ம.பி.யில் 5 நாட்களாக பிரார்த்தனை செய்த தாய்

செய்திப்பிரிவு

போபால்: மகன் இறந்து 5 நாட்​களாக சடலத்​துடன் காத்​திருந்த தாய் குறித்த செய்தி இணை​யத்​தில் வைரலாகி​யுள்​ளது. மகன் மீண்​டும் உயிர் பெற்று வரு​வதற்​காக அந்​தத் தாய் பிரார்த்தனை செய்​த​வாறு 5 நாட்​கள் இருந்​துள்​ளார்.

இதுகுறித்து மத்​திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்ட போலீஸ் எஸ்​.பி. ரோஹித் கஷ்​வானி கூறிய​தாவது: விதிஷா பகு​தி​யில் 42 வயதான பேஷன் டிசைனர் தனது தாயுடன் வசித்து வந்​துள்​ளார். இந்​நிலை​யில் அவரது வீட்​டிலிருந்து துர்​நாற்​றம் வீசுவ​தாக அப்பகுதி​யில் வீடு வீடாக பால் விநி​யோகம் செய்​பவர் போலீஸாரிடம் புகார் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்​த​போது மகனின் சடலத்​துடன் தாய் இருந்​துள்​ளார்.

மகன் இறந்து 5 நாட்​களாகி​யும் சடலத்தை விட்டு அகலாது அந்​தத் தாய் பிரார்த்​தனை செய்​த​வாறு இருந்​துள்​ளார். மகன் மீண்​டும் உயிர் பெற்று வரு​வதற்​காக அவர் பிரார்த்​தனை செய்​த​வாறு இருந்​துள்​ளார். மேலும், வீட்​டில் எந்​த​வித சம்​பவ​மும் நடக்​காதது போலவே வீட்​டின் அனைத்து வேலைகளை​யும் அந்​தத் தாய் பார்த்து வந்​துள்​ளார். இதையடுத்து தாயை மீட்ட போலீ​ஸார் அவரை மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​துள்​ளனர்.

மகனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்​காக கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது. அந்​தத் தாயார், ஓய்வு பெற்ற ஆசிரியை. ஆசிரியையின் கணவர் இறந்த பின்​னர் மகனுடன் அவர் வசித்து வரு​கிறார். அவருக்கு மொத்​தம் 3 மகன்​கள். மீத​முள்ள 2 பேரும், வெளி​நாடு​களில் செட்​டிலாகி வசித்து வரு​கின்​றனர். மகன் இறந்த விரக்​தி​யிலும், அவரை மீட்டு வரு​வதற்​கான முயற்​சி​யிலும் அவர் பிரார்த்​தனை செய்​த​வாறு இருந்​துள்​ளார்.

மகன் இறந்த செய்​தியை அவரது உறவினர், அண்​ணன்​களிடம் தெரி​வித்​துள்​ளோம். பால்​காரர் கொடுத்த தகவலின் பேரில் அவரை மீட்​டோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்​னர் மகனின் சாவுக்கு என்ன காரணம் என்​பது தெரி​யும். அந்​தத் தாயிட​மும் விசா​ரணை நடத்தி வரு​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். மகனின் சடலத்​துடன் 5 நாட்​கள் தாய் இருந்த செய்தி அப்​பகு​தி​யில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT