இந்தியா

மேகாலயாவில் 10,293 பேருக்கு எச்ஐவி நோய்க்கு சிகிச்சை

செய்திப்பிரிவு

ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவையில் எச்ஐவி தொடர்பாக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் டபிள்யூ. ஷில்லா அளித்த பதில் வருமாறு:

இந்தியாவிலேயே மேகாலயாவில் தான் எச்ஐவி பாதிப்பு அதிகம் உள்ளது. மாநிலத்தில் 10,293 பேர் எச்ஐவி தொற்றுக்கான ஆன்டிரெட்ரோ வைரல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆபத்தான போக்கை சமாளிக்க 5 ஆண்டு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி அனுமதித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எச்ஐவி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட 749 பேர் இறந்துள்ளனர்.

மேகாலயாவில் எச்ஐவி-க்கு 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் உள்ளன. நான்கு மொபைல் மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

          
SCROLL FOR NEXT