இந்தியா

“வெளிநாட்டு உதவியால்தான் மோடி பிரதமர் ஆனார்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நரேந்​திர மோடி வெளிநாட்டு சக்​தி​களின் உதவியால்​தான் பிரதமர் ஆனார் என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார்.

கடந்த வாரம் தேசிய ஒற்​றுமை தினத்தை (ராஷ்ட்​ரிய ஏக்தா திவாஸ்) முன்​னிட்டு பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “இந்தியாவைப் பிரிக்​கவும் நாட்​டின் பிம்​பத்​தைச் சீர்​குலைக்​கவும் வெளி​நாடுகளி​லிருந்து சில எதிரி சக்​தி​கள் சதி செய்​கின்​றன. வெளி​நாடுகளில் அவர்​கள் யாரையெல்​லாம் ரகசி​ய​மாக சந்​திக்​கிறார்​கள் என்​பதை மக்​கள் அடை​யாளம் காண வேண்​டும்” என தெரி​வித்​திருந்​தார்.

இதற்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில், மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில், “பிரதமர் அவர்​களே, நாட்டு மக்​களிடம் பொய் சொல்​வதை நிறுத்துங்​கள். நீங்​கள் வெளி​நாட்டு உதவியால்​தான் பிரதமர் ஆனீர்​கள்; அவர்​கள் தய​வால்​தான் ஆட்​சி​யில் நீடிக்​கிறீர்​கள்.

நாட்​டின் நிதி அமைப்​பும் சமூக ஊடகங்​களும் வெளி​நாட்​டின​ரால் கட்​டுப்​படுத்​தப்​படு​கின்​றன. தைரியம் இருந்​தால் இது​குறித்து எந்த மேடை​யிலும் என்​னுடன் நேருக்கு நேர் விவாதிக்​கத் தயாரா” என சவால் விடுத்​தார். பாஜக​வின் பதிலடி ராகுல் காந்​தி​யின் இக்​குற்​றச்​சாட்​டுக்கு பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் சி.ஆர். கேசவன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்​டனில் பிரிட்​டிஷ் எம்.பி.க்​கள் மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​களிடையே ராகுல் பேசிய காணொலியைப் பகிர்ந்த சி.ஆர். கேசவன், இந்​தி​யாவின் உள்​நாட்டு விவகாரங்​களில் வெளி​நாட்டு சக்​தி​கள் தலை​யிட வேண்​டும் என்​றும், இது வெறும் இந்திய அரசி​யல் போராட்​டம் மட்​டுமல்ல என்​றும் வெளிப்படையாகக் கோரிய​வர் ராகுல் காந்​திதான் என்று தெரி​வித்​துள்​ளார்.

மேலும், சர்​வ​தேச நிதி​யாளர் ஜார்ஜ் சோரோஸின் நிதி உதவியுடன் இயங்​கும் அமைப்​பு​களு​டனும், ‘ஹிண்​டன்​பர்க்’ ஆய்வு நிறு​வனத்​துடனும் காங்​கிரஸுக்​கும் ராகுல் காந்​திக்​கும் உள்ள ரகசி​யத் தொடர்​பு​கள் என்ன என்​பது குறித்து அவர்​கள் மவுனம் காப்​பது ஏன் என்​றும், ராகுல் அடிக்​கடி மேற்​கொள்​ளும் ரகசிய வெளி​நாட்​டுப் பயணங்​களின் நோக்​கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT