இந்தியா

கணவரை கொலை செய்து ப்ளூ டிரம்மில் அடைத்த மனைவி, காதலர் குற்றவாளிகள் மீரட் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கணவரை குத்​திக் கொலை செய்து ப்ளூ டிரம்​மில் மறைத்த வழக்​கில் மனை​வி, அவரது காதலர் ஆகியோர் குற்றவாளி​கள் என மீரட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்​டைச் சேர்ந்​தவர் சவுரவ் ராஜ்புத். இவரது மனைவி முஸ்​கான் ரஸ்​தோகி. முஸ்​கானுக்கு சஹில் ஷுக்லா என்ற காதலர் உள்​ளார். இந்​நிலை​யில் தங்​களது காதலுக்கு இடையூறாக இருந்த சவுரவை முஸ்​கானும், சஹிலும் இணைந்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்​தி​யால் குத்​திக் கொலை செய்தனர்.

உடலை ப்ளூ டிரம்​மில் போட்டு சிமெண்ட் கான்​கிரீட் கலவை, மணலைக் கொட்​டினர். பின்​னர் ஆயுதம், டிரம்மை மறைத்து வைத்​து​விட்டு இமாச்சல பிரதேசத்​துக்கு தப்​பியோடினர். இந்த வழக்​கில் மீரட் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி சஹில், முஸ்கானை கைது செய்தனர்.

126 முறை நடந்த நீதி​மன்ற விசா​ரணை​யில் 22 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டனர். விசா​ரணை முடிந்து நேற்று மீரட் மாவட்ட நீதிபதி அர்​விந்த் குமார் மிஸ்ரா தீர்ப்பு வழங்​கி​னார். கணவரை கொலை செய்​து, அதை மறைத்த வழக்​கில் அவரது மனைவி முஸ்​கான், ​காதலர் சஹில் ஆகியோர் குற்​ற​வாளி​கள் என நீதி​மன்​றம் தீர்ப்பளித்தது.

ப்ளூ டிரம்​மை​யும், கொலைக்​குப் பயன்​படுத்​திய ஆயுதங்​களை​யும் இவர்​கள் மறைத்​துள்​ளனர். இவர்​களுக்​கான தண்​டனை விவரம் பின்​னர் அறிவிக்​கப்​படும்​. இவ்​வாறு நீதிப​தி தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT