இந்தியா

மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு: விசாரணை நடத்த முதல்வர் யோகிக்கு கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருட்டு உறுதி செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், உ.பி.யில் மது​ரா​வில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயி​லிலும் காணிக்கை திருட்டு நடந்​துள்​ள​தாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் நிலம் மீட்பு தொடர்​பான வழக்​கின் மனுதாரர்​களில் ஒரு​வ​ரான துறவி தினேஷ் பலஹாரி மகா​ராஜ் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து விசா​ரிக்க எஸ்​ஐடி அமைக்க வேண்​டும் என்று முதல்வர் ஆதித்​ய​நாத்​துக்கு கோரிக்கை வைத்​துள்​ளார்.

இதுகுறித்​து, முதல்​வருக்கு துறவி தினேஷ் எழு​திய கடிதத்​தில், ‘‘கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்​கை​யாக ரொக்​கம், தங்​கம், வெள்ளி ஆபரணங்​களைப் பக்​தர்​கள் வழங்கி வரு​கின்​றனர். அதில் முறை​கேடு​கள் நடக்​கின்​றன.

கோயில் நிர்​வாகி கிருஷ்ண ஜென்​மஸ்​தான் சேவா சன்​ஸ்​தான் செய​லா​ளர் கபில் சர்​மா, ரூ.1,000 கோடி மதிப்​புள்ள சொத்​து​களைச் சேர்த்​துள்​ளார். எனவே காணிக்கை குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று வலியுறுத்தி உள்​ளார்.

ஆனால், தன் மீதானப் புகாரை மறுத்​துள்ள கபில் சர்​மா, அரசு விசா​ரணைக்கு அறக்​கட்​டளை தயா​ராக இருப்​ப​தாக தெரிவித்துள்​ளார்.

மதுரா கோயிலை நிர்​வகிக்​கும் கிருஷ்ண ஜென்​மஸ்​தான் சேவா சன்​ஸ்​தானும், கோயில் நிதி முறை​கேடு குறித்து எஸ்​ஐடி விசாரிக்க வேண்​டும் என்று முதல்​வர் ஆதித்​ய​நாத்​துக்கு கடிதம் எழுதியுள்​ளது.

இந்​நிலை​யில், உத்​தவ் தலை​மையி​லான சிவசேனா கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள், ஜம்மு காஷ்மீர் மாநில கட்​சித் தலை​வர் மணிஷ் சாஹ்னி தலை​மை​யில் நேற்று போராட்​டம் நடத்​தினர். அப்​போது, நான்கு சங்​க​ராச்​சா​ரி​யார்​களின் தலை​மை​யில் ‘இந்து பாது​காப்பு வாரி​யம்’ அமைக்க வேண்​டும் என்று அவர்​கள் கோரிக்கை விடுத்​தனர்.

போராட்​டத்​தின் போது மணிஷ் பேசுகை​யில், ‘‘ராமர் கோயி​லில் காணிக்​கை, நிலப் பரிவர்த்​தனை​யில் முறை​கேடு, மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வழங்​கப்​பட்ட வெள்​ளி​யின் தரம் குறித்த சர்ச்​சை, திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் லட்டு பிர​சாத விவ​காரம் ஆகியவை லட்​சக்​கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்​கையை பா​தித்​துள்​ளது. எனவே, முற்​றி​லும் சுதந்​திர​மான அமைப்பு தேவைப்​படு​வ​தால் அனைத்​து கோயில்​களை​யும்​ அரசே நிர்​வகிக்​க வேண்​டும்​’’ என்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT