இந்தியா

ராஜஸ்தானை தாக்கிய மிகப்பெரிய புழுதிப் புயல்: பீதியில் உறைந்த மக்கள்

திகைக்க வைக்கும் வீடியோ!

வெற்றி மயிலோன்

பிகானேர்: ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கியது.

பிகானேர் பகுதியில் நேற்று மதியம் வீசிய புழுதிப் புயலில், பகல் நேரம் இருள் போல காட்சியளித்தது. மிகப்பெரிய மஞ்சள் புழுதிப் புயல் நகரத்தை நோக்கி முன்னேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்த புழுதிப் புயல் காரணமாக பிகானேரின் முக்கிய சாலைகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு காட்சித் திறன் கடுமையாக பாதித்தது. மஞ்சள் நிற புழுதிப் புயல் மற்றும் ஒரு விசித்திரமான சத்தம் காரணமாக, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் அவசர அவசரமாக தஞ்சம் புகுந்தனர். மேலும், பலத்த சத்தத்துடன் வந்த புழுதி நிறைந்த காற்று தீவிரமடைந்ததால் பல பகுதிகளில் மக்களிடம் பீதி ஏற்பட்டது.

கடைக்காரர்கள் அவசரமாகக் கடைகளை மூடியதாலும், மக்கள் புயலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முண்டியடித்து ஓடியதாலும், சாலைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. புழுதிப் புயலின் கடும் வேகத்தால் நகரம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்ததால், பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

இதுபோன்ற மோசமான வானிலை நிலவும் போது, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. தோல்பூர் மாவட்டத்தின் பாரி பகுதியில் அதிகபட்சமாக 58 மி.மீ மழை பதிவானது. மேலும், ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புழுதிப் புயல் உருவாகக் காரணம் என்ன?

வடஇந்​திய மாநிலங்​களில் கோடை காலத்​தில் நிலங்​கள் வறண்டு விடு​கின்​றன. இதனால் மண் பொடி​யாக மாறி காற்​றில் கலக்​கிறது. அதிக வெப்​பத்​தால் வலு​வான குறைந்த காற்​றழுத்த மண்​டலம் உரு​வாகிறது. மேலும் பாகிஸ்​தான் மற்​றும் தார் பாலை​வனத்​தில் இருந்து வீசும் வெப்பக் காற்று மணல், தூசியை வாரி இறைக்​கிறது.

இதுபோன்ற காரணங்​களால் வடஇந்​திய மாநிலங்​களில் மே, ஜூன் கோடை காலத்​தில் புழு​திப் புயல்​கள் உரு​வாகின்​றன. அந்த வகையில், கடந்த 13-ம் தேதி மாலை​யில் உத்தர பிரதேசம் மற்​றும் அண்டை மாநிலங்​களில் புழுதிப் புயல் வீசி​யது. உத்தர பிரதேசத்​தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்​தில் புழுதிப் புயல் வீசி​யது. பல்​வேறு இடங்​களில் இடி, மின்​னலுடன் பலத்த மழை​யும் பெய்​தது. புழுதிப் புய​லால் பிர​யாக்​ராஜ், பதோஹி, மிர்​சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT