இந்தியா

ஹைதராபாத் - சென்னை இடையே புல்லட் ரயிலுக்கு ‘மார்க்கிங்’ பணி

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத் - சென்னை, ஹைதராபாத் - பெங்களூரு இடையே அதிவேக ரயில் (புல்லட் ரயில்) இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தப் பாதைக்கான அளவீட்டு குறியீடு அமைக்கும் ‘மார்க்கிங்’ பணி கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரங்காரெட்டி மாவட்டத்தில் தொடங்கி, நல்கொண்டா மாவட்டம் வழியாக விகாராபாத் வரை மார்க்கிங் பணி நடைபெற்று வருகிறது. சம்ஷாபாத், மஹேஷ்வரம், கந்துகூரு, யாச்சாரம் வழியாக நல்கொண்டா மாவட்டம், நாம்பல்லி மண்டலம் வரை கடந்த ஒரு வாரமாக ஆய்வுக் குழு மார்க்கிங் பணிகளை செய்து வருகிறது.

இதேபோன்று, சம்ஷாபாத், ஷாபாத் மண்டலங்கள் வழியாக ஹைதராபாத்- பெங்களூருவுக்கு புல்லட் ரயில் பாதைக்கான மார்க்கிங் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் கூட சிவப்பு- வெள்ளை நிறத்தில் மார்க்கிங் செய்து வருகின்றனர்.

யாச்சாரம் மண்டலத்தில் ஏற்கெனவே குரு மிட்டா, மேட்டி பல்லி, யங்கீஸ் கூடம், தக்கள்ள பல்லி, சிந்த பல்லி நல்லபெல்லி, மந்தனா, கவுரேள்ளு ஆகிய கிராமங்களில் மார்க்கிங் பணிகள் நிறைவுற்றன.

SCROLL FOR NEXT