குற்​ற​வாளி முகமது ஷரீக்

 
இந்தியா

மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

பெங்களூரு: மங்​களூரு குண்​டு​வெடிப்பு வழக்​கில் முக்​கிய குற்றவாளி​யான முகமது ஷரீக்​கிற்கு 10 ஆண்டு சிறை தண்​டனை விதித்து பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

கர்​நாடக மாநிலம் மங்​களூரு​வில் கடந்த 2022-ல் ஆட்​டோ​வில் குக்கர் குண்​டு​ வெடித்​த​தில் ஆட்டோ ஓட்​டுநர் புருஷோத்​தம் பூஜாரி (37) காயமடைந்​தார். அந்த ஆட்​டோ​வில் குண்​டுடன் பயணித்த முக்​கிய குற்​ற​வாளி முகமது ஷரீக் (24) பலத்த‌ தீக்​காயங்​களு​டன் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்​கு ப​திவு செய்த என்ஐஏ அதி​காரி​கள் முகமது ஷரீக்​கிற்கு எதி​ராக 1200 பக்க குற்​றப் ​பத்​திரிக்கை தாக்​கல் செய்தனர். இவ்​வழக்கை விசா​ரித்த பெங்​களூரு சிறப்பு நீதிமன்றம் முகமது ஷரீக்​கிற்கு கூட்டு சதி, சேதம் விளை​வித்​தல், தேசிய பாது​காப்பு சட்​டத்​தின்​கீழ் குற்​றங்​களை இழைத்​ததற்​காக 10 ஆண்டு சிறை தண்​டனை விதித்து உத்​தர​விட்​டது. இதையடுத்து அவர் பெங்​களூரு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்​.

SCROLL FOR NEXT