டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் மம்முட்டிக்கு (வலது ஓரம்) பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஆகியோர் பத்ம விருதினை பெற்றுக் கொண்டனர். படங்கள் பிடிஐ

 
இந்தியா

நடிகர் மம்முட்டி, மாதவன் உட்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடிகர்​கள் மம்​முட்​டி, மாதவன், சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, டென்​னிஸ் வீரர் விஜய் அமிர்​த​ராஜ் உள்​ளிட்ட 65 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்​கி​னார்.

கலை, இலக்​கி​யம், கல்​வி, விளை​யாட்​டு, மருத்​து​வம், சமூக சேவை, அறி​வியல், பொறி​யியல், மத்​திய அரசுப் பணி, தொழில் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​கு​வோருக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கிறது. இதன்​படி நடப்பு 2026-ம் ஆண்​டுக்​கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி​யில் அறிவிக்​கப்​பட்​டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன. ஒட்டுமொத்​த​மாக 131 பேர் விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் 66 பேருக்கு கடந்த மே 26-ம் தேதி பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று நடந்த விழா​வில் 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பிரதமர் நரேந்​திர மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மத்​திய அமைச்​சர் அமித் ஷா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 பேருக்கு பத்ம விபூஷண், 7 பேருக்கு பத்ம பூஷண், 56 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்​கி​னார்.

கேரளா​வின் ஜென்​மபூமி நாளிதழ் இணை நிறு​வனரும் பிரபல எழுத்​தாள​ரு​மான பி. நாராயணன், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.டி. தாமஸ் (கேரளா) ஆகியோர் பத்ம விபூஷண் விரு​தினை பெற்​றுக் கொண்​டனர். தமிழகத்தை பூர்வி​க​மாகக் கொண்ட டென்​னிஸ் வீரர் விஜய் அமிர்​த​ராஜ், தமிழகத்​தின் ஈரோட்டை சேர்ந்த எஸ்​.கே.எம். குழும நிறு​வனர் மயி​லானந்​தன், மலை​யாள நடிகர் மம்​முட்​டி, கேரளாவை சேர்ந்த சமூக ஆர்​வலர் வெள்​ளப்​பள்ளி நடேசன், ஆந்​தி​ராவை பூர்வி​க​மாகக் கொண்ட பிரபல அமெரிக்க மருத்​து​வர் தத்​தாத்​ரே​யுடு நோரி, மறைந்த ஜார்க்​கண்ட் முன்​னாள் முதல்​வர் சிபுசோரன், பாலிவுட் பின்​னணி பாடகி அல்கா யாக்​னிக் ஆகியோர் பத்ம பூஷண் விரு​தினை பெற்​றுக் கொண்​டனர்.

அசாமை சேர்ந்த சிற்பி நூருதீன் அகமது, தமிழகத்​தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் திரு​வாரூர் பக்​தவத்​சலம், தமிழகத்​தின் சேலத்தை சேர்ந்த வெண்கல சிற்ப கலைஞர் ராஜஸ்​த​பதி காளியப்ப கவுண்​டர், விஞ்ஞானி தங்கராஜ், ஹைத​ரா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் கிருஷ்ண​மூர்த்தி பாலசுப்​பிரமணி​யன், ஆகாஷ் ஏவு​கணை திட்ட முன்​னாள் இயக்​குநர் சந்​திரமவுலி கடமானுகு (தெலங்​கா​னா), கர்​நாட​காவை சேர்ந்த விண்​வெளி பொறி​யாளர் சுபா வெங்​கடேச ஐயங்​கார், கர்​நாட​காவை சேர்ந்த மறைந்த தொழில​திபர் ஜெக​நாதன், பஞ்​சாபை சேர்ந்த ஆன்​மிக தலை​வர் நிரஞ்​சன் தாஸ், சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த எழுத்​தாளர் மங்கள கபூர், மகா​ராஷ்டிர தொழில​திபர் அசோக் காடே, ரஷ்ய எழுத்​தாளர் லியுட்​மிலா கோக்​லோ​வா, கர்​நாட​காவை சேர்ந்த கல்​வி​யாளர் பிர​பாகர் பசவபிரபு கோரே, அசாம் நாட்​டுப்​புற பாடகி பொக்​கிலா லெக்​தேபி, தெலங்​கா​னாவை சேர்ந்த மறைந்த ராம ரெட்​டி, மத்​திய உள்​துறை முன்​னாள் துணைச் செய​லா​ளர் ஆர்​விஎஸ். மணி, கேரளாவை சேர்ந்த மோகினி​யாட்ட கலைஞர் கலாமண்​டலம் விமலா மேனன், ஜார்​ஜி​யாவை சேர்ந்த மறைந்த மல்​யுத்த வீரர் விளாடிமிர் மெஸ்ட்​விரிஷ்​விலி, தமிழகத்தை சேர்ந்த கால்​நடை மருத்​து​வர் புண்​ணி​யமூர்த்தி நடேசன், தெலுங்கு நடிகர் ராஜேந்​திர பிர​சாத், ஹாக்கி வீராங்​கனை சவீதா புனி​யா, தமிழ்​நாடு வேளாண் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் கே.​ராம​சாமி, நடிகர் மாதவன், தமிழகத்தை சேர்ந்த கர்​நாடக இசைக் கலைஞர்​கள் ரஞ்​சனி, காயத்​ரி, கிரிக்​கெட் வீரர் ரோகித் சர்மா இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பொறி​யாளர் பிரேம் லால் கவுதம், மேற்​கு​வங்​கத்தை சேர்ந்த எழுத்​தாளர் அசோக் குமார் ஹால்​தர், கர்​நாட​காவை சேர்ந்த மருத்​து​வர் சுரேஷ் ஹனகாவடி, மேற்​கு​வங்​கத்தை சேர்ந்த இசைக் கலைஞர்​கள் தருண் பட்​டாச்​சார்​யா, ஜோதிஷ் தேவ்​நாத் உள்ளிட்டோர் பத்​ம ஸ்ரீ விருதினை பெற்​றுக்​ கொண்​டனர்​.

SCROLL FOR NEXT