கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி நேற்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி தெற்கு கொல்கத்தாவில் உள்ள அபிஷேக்கின் வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளிக்கிழமை இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, அபிஷேக் வீட்டின் மீது பாஜகவினர் கற்களை வீசியதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மம்தா நேற்று கூறும்போது, “எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து ஆளும் பாஜகவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது அபிஷேக் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பாஜகவினரிடம் எத்தனை புல்டோசர்கள் உள்ளன. நான் உங்கள் முன்னாள் நிற்கிறேன். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் என் மீது புல்டோசர் ஏற்றலாம்” என்றார்.