மகேஷ் தீக்‌ஷித்

 
இந்தியா

மத்திய உளவுப் பிரிவு தலைவராக மகேஷ் தீக்‌ஷித் நியமனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய உளவுப் பிரிவு (ஐபி) புதிய தலை​வ​ராக 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதி​காரி மகேஷ் தீக்‌ஷித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

மத்​திய உளவுப் பிரிவு தலை​வர் தபன் தேகா​வின் பதவி நீட்​டிப்பு இம்​மாதத்​துடன் முடிவடைகிறது. இதையடுத்து உளவுப் பிரி​வின் புதிய தலை​வ​ராக மகேஷ் தீக்‌ஷித்தை பிரதமர் மோடி தலை​மையி​லான நியமனக் குழு நியமித்​துள்​ளது. இவர் 2 ஆண்​டு​கள் இப்​ப​த​வி​யில் இருப்​பார்.

1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதி​காரி​யான மகேஷ் தீக்‌ஷித் தனது பணிக் காலத்​தில் பெரும்​பாலும் உளவுத்​துறை​யில் சிறப்பு இயக்குந​ராக இருந்​துள்​ளார். ஜம்மு காஷ்மீரில் 370-வது சிறப்பு சட்டப் ​பிரிவை நீக்​கிய பிறகு, அங்கு இவர் உளவுப் பிரிவு தலைவராக முக்​கிய பங்​காற்​றி​னார்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, இவர் உளவுப் பிரிவு தலை​வ​ராக பணி​யாற்​றி, பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் தீவிர​வாத முகாம்​களை அழித்​த​தில் முக்​கிய பங்​காற்​றி​னார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT