இந்தியா

மகா​ராஷ்டி​ரா​வில் ஆற்​றில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்

வீடு​களுக்கு எடுத்​துச் சென்று பயன்​படுத்த வேண்​டாம் என எச்​சரிக்கை

செய்திப்பிரிவு

ராய்​காட்: மகா​ராஷ்டி​ரா​வின் ராய்​காட் பகு​தி​யில் வெள்​ளத்​தில் எரி​வாயு சிலிண்​டர்​கள் மிதந்து வந்த வீடியோ மக்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இவற்றை வீடு​களுக்கு எடுத்துச்சென்று பயன்​படுத்த வேண்​டாம் என்று மாவட்ட நிர்​வாகம் கேட்டுக் கொண்​டுள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வில் பெய்து வரும் கனமழை காரண​மாக, ஹெச்பிசிஎல் பாதாளகங்கா எல்​பிஜி சிலிண்​டர் நிரப்​பும் ஆலை​யின் பாது​காப்​புச் சுவர் திடீரென இடிந்து விழுந்​தது. இதனால், வெள்ள நீர் நேரடி​யாக ஆலைக்​குள் புகுந்​தது.

இதன் விளை​வாக, ஆலை வளாகத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த சுமார் 3,000 எரி​வாயு சிலிண்​டர்​கள் வெள்ள நீரில் அடித்​துச் செல்லப்பட்டு, பாதாளகங்கா ஆறு மற்​றும் கர்​பாடா ஓடை​யில் தத்தளித்​த​படி மிதக்​கத் தொடங்​கின. இந்த விநோத​மான காட்சியை பாலத்​தின் மீது நின்​றபடி பொது​மக்​கள் பலரும் தங்களது மொபைல் போன்​களில் ஆச்​சரி​யத்​துடன் வீடியோ​வாகப் பதிவு செய்து சமூகவலை​தளங்​களில் வெளி​யிட்​ட​தால், பொது​மக்​கள் மத்​தி​யில் ஆர்​வம் அதி​க​மானது.

இதையடுத்து, ராய்​காட் மாவட்ட ஆட்​சி​யர் கிஷன் ஜாவ்லே கூறுகையில், ”ஆற்​றில் அடித்​துச் செல்​லப்​பட்ட இந்த சிலிண்டர்கள் சில​வற்​றில் எரி​வாயு நிரப்​பப்​பட்​டிருக்​கலாம். பாதுகாப்​புக்கு எந்த உத்​தர​வாத​மும் இல்​லை. எனவே, பொது​மக்கள் வீடு​களுக்கு எடுத்​துச் சென்று பயன்​படுத்த முயற்​சிக்க வேண்​டாம். மீட்​கப்​படும் எரி​வாயு சிலிண்​டர்​களை உடனடி​யாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடமோ அல்​லது நிறு​வனத்​திடமோ ஒப்படைக்க வேண்​டும்.

இந்த சிலிண்​டர்​களை நேரடி​யாக ஹெச்​பிசிஎல் நிறுவன வளாகம், அரு​கில் உள்ள ஹெச்​பிசிஎல் விநி​யோகஸ்​தர், கிலாப்பூர் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம், பிற வட்​டாட்​சி​யர் மற்​றும் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கங்​களில் கொண்டு வந்து ஒப்​படைக்க வேண்​டும்” என்றார்.

SCROLL FOR NEXT