மகா​ராஷ்டிர மாநில உள்துறை இணை அமைச்​சர் யோகேஷ் கதம்

 
இந்தியா

பொது சிவில் சட்டம் கொண்டு வர மகாராஷ்டிர அரசு திட்டம்

வரைவு மசோதா தயாரிக்க குழு அமைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: நம் நாட்​டில் பொது சிவில் சட்​ட​மானது (யூசிசி) தற்​போது கோவா, உத்​த​ரா​கண்ட், குஜ​ராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்​களில் அதி​காரப்​பூர்​வ​மாக நடை​முறை​யில் உள்​ளது அல்லது சட்​ட​மாக இயற்​றப்​பட்​டுள்​ளது.

இதில் சில மாநிலங்​கள் ஏற்​கெனவே சட்​டத்தை அமல்​படுத்​தி விட்ட நிலை​யில், மற்றவை அதற்​கான இறுதிக் கட்​டப்​ பணி​களை மேற்​கொண்டு வரு​கின்றன. இந்​நிலை​யில் மகா​ராஷ்டி​ரா​விலும் பொது சிவில் சட்​டத்​தைக் கொண்டு வர அந்த மாநில அரசு திட்டமிட்​டுள்​ளது.

இது குறித்து மகா​ராஷ்டிர மாநில உள்​துறை இணை அமைச்​சர் யோகேஷ் கதம் நேற்று சட்​டப்​பேர​வை​யில் கூறிய​தாவது: மகாராஷ்டி​ரா​வில் பொது சிவில் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தில் 100 % உறு​தி​யாக உள்​ளோம். இதற்​கான வரைவு மசோ​தா​வைத் தயாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

வரைவு மசோ​தா​வைத் தயாரிப்​ப​தற்​கான பணி​களில் இந்​தக் குழு தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. இந்த சட்​டம் மூலம் பலதார மணம் தடை செய்​யப்​படும். இந்​தச் சட்​டம் அமலுக்கு வரும்​போது பல தார மணம் செய்​பவர்​களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்​டனை வி​திக்க வழி ​வகை செய்​யப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT