இந்தியா

4.50 கோடி ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்

என். மகேஷ்குமார்

விஜயவாடா: ஆந்திரா​வில் விநாயகருக்கு 4.50 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்​டு​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது பக்தர்களை வெகு​வாகக் கவர்ந்​தது.

விநாயகர் சதுர்த்​தி​யை யொட்டி ஆந்​தி​ரா, தெலங்​கானா மாநிலங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு வாரம் கடந்​த​போதும், சில இடங்​களில் இன்​ன​மும் விநாயகர் சிலைகள் கரைக்கப்​ப​டா​மல் தொடர்ந்து பூஜைகள் நடை​பெற்று வருகின்றன.

ஆந்​தி​ரா​வின் என்​.டி.ஆர். மாவட்​டம், நந்​தி​காமா வாசவி மார்க்​கெட் பகு​தி​யில் கணபதி உற்சவ கமிட்​டி​யினர் 44-வது ஆண்​டாக இந்த ஆண்​டும் விநாயகர் சதுர்த்​தியை விமரிசை​யாக கொண்டாடினர்.

குறிப்​பாக விநாயகர் சிலை பந்​தல் 4.50 கோடி மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களால் அலங்​காரம் செய்யப்பட்டிருந்தது. இது பக்​தர்​களை வெகு​வாக கவர்ந்​தது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக பலத்த பாது​காப்​பும் போடப்பட்டிருந்​தது.

இதே​போன்று தெலங்​கா​னா​வில் வாரங்​கல் சிவாநகரில் வாசவி அறக்​கட்​டளை​யினர் சார்​பில் விநாயகருக்கு 1.93 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்​டு​களால் அலங்​காரம் செய்யப்பட்டிருந்​தது. இந்த வி​நாயகரை காண​வும் பக்​தர்​கள்​ திரண்​டு வந்​தனர்​.

SCROLL FOR NEXT