இந்தியா

சிஜேபியின் சவுரவ் தாஸுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) இணை ஒருங்​கிணைப்​பாளர் சவுரவ் தாஸுக்கு மும்பை போலீ​ஸார் லுக்-அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​திருந்​த​தாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது.

பிரிட்​டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்​கலைக்​கழகத்​தில் சிஜேபி இயக்​கம் குறித்து உரையாற்​று​வதற்​காக புறப்​பட்ட சவுரவ் தாஸ், கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி விமான நிலை​யத்​தில் போலீ​ஸாரால் தடுத்து நிறுத்​தப்​பட்​டார். அவரது பாஸ்​போர்ட் உள்​ளிட்ட ஆவணங்​களில் அவரது பிறப்​பிடம் குறித்த தகவல்​களில் முரண்​பாடு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இதனை எதிர்த்து, டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் சவுரவ் தாஸ் மனு தாக்​கல் செய்​தார்.

இதனிடையே, நேற்று டெல்லி உயர் நீதி​மன்ற நீதிபதி அமித் மஹாஜன் முன்​னிலை​யில் நடை​பெற்ற நீதி​மன்ற விசாரணையில், சவுரவ் தாஸுக்கு எதிராக மும்பை போலீ​ஸார் லுக்-அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​திருந்​த​தாகவும், அதற்கு அவர் உரிய பதிலளிக்​க​வில்லை என்​றும் மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், இதுகுறித்​து எந்​தவொரு தகவலும் தனக்​குத் தெரி​விக்​கப்​பட​வில்லை என சவுரவ் தாஸ் தரப்பில் கூறப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து இந்த மனு மீதான அடுத்தகட்ட விசா​ரணை வரும் டிசம்​பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்​னதாக, தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்​டங்​களின்​போது, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்​யப்​பட்டு பிறகு விடுவிக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT