இந்தியா

மக்களவைத் தொகுதிகளை 816 ஆக அதிகரிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஏப்.16-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்​ர​வரி 13ம் தேதி வரை நடை​பெற்​றது. இதன் 2வது அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளு​மன்ற விவகாரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு மாநிலங்​களவை​யில் பேசும்​போது, “அடுத்த சில வாரங்​களில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் நடை​பெறும். இதில் முக்​கிய மசோதாக்கள் நிறைவேற்​றப்​படும்" என்று தெரி​வித்​தார்.

          

இது தொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் ஏப்​ரல் 16-ம் தேதி தொடங்​கி, 18-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் மக்களவைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 543-ல் இருந்து 816 ஆக அதி​கரிக்க வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற திட்ட​மிடப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மகளிர் இடஒதுக்​கீட்டு சட்டத்தை முன்​கூட்​டியே அமல்​படுத்த முடி​யும்.

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்றப்​பட்​டது. இதன்​படி மக்​களவை​யில் மூன்​றில் ஒரு பகுதி இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்பட வேண்​டும். புதிய மசோ​தாக்​களின்​படி மக்​கள​வைத் தொகு​தி​களின் இடங்​கள் 816 ஆக அதி​கரிக்​கும். இதில் 273 இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​படும். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவித்தன.

இது தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் நேற்று முன்​தினம் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 50 சதவீத​மாக அதி​கரிக்க மத்​திய அரசு ஒரு மசோ​தாவை வலுக்கட்டாய​மாக நிறைவேற்ற திட்​ட​மிட்டு உள்​ளது. உதாரணமாக உத்தர பிரதேசத்​தில் தற்​போது 80 மக்​கள​வைத் தொகு​தி​களும், தமிழ்​நாட்​டில் 39 தொகு​தி​களும் உள்​ளன.

புதிய மசோ​தா​வால் உத்தர பிரதேசத்​தில் தொகு​தி​களின் எண்ணிக்கை 120 ஆக உயரும். தமிழகத்​தில் 59 ஆக மட்​டுமே அதிகரிக்​கும். வட மாநிலங்​கள் கூடு​தலாக 200 தொகு​தி​களைப் பெறும். தென் மாநிலங்​களுக்கு 66 இடங்​கள் மட்​டுமே கிடைக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக ஜெய்​ராம் ரமேஷ் மாநிலங்​களவை​யில் நேற்று கூறிய​தாவது: தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா உள்​ளிட்ட மாநிலங்களில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்​ளன. இந்த அரசி​யல் சூழலைப் பயன்​படுத்தி மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் மசோ​தாவை அறி​முகம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

மகளிருக்​கான தொகு​தி​களை அதி​கரிப்​ப​தாக கூறி அரசி​யல் ஆதா​யம் தேட பாஜக முயற்சி செய்​கிறது. இதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். புதிய மசோ​தாக்​கள் தொடர்​பாக அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்த வேண்​டும். இவ்​வாறு ஜெய்​ராம் மரேஷ் தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசும்​போது, “மகளிக்கு இடஒதுக்​கீடு வழங்கு​வதை காங்​கிரஸ் ஆதரிக்​கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசி​யல் விளை​யாட்டை நடத்​தக் கூடாது" என்று தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா கூறும்​போது, “ஒரு மசோ​தாவை எப்​போது கொண்டு வர வேண்​டும் என்​பது மத்தி​ய அரசுக்​கு தெரி​யும்" என்​றார்​.

SCROLL FOR NEXT