இந்தியா

லஷ்கர் தீவிரவாதி மூஸா என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜம்மு: பாகிஸ்​தானின் லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பைச் சேர்ந்த தீவிரவாதியான ஹாஷிம் மூஸா காஷ்மீர் மாநிலம் புத்​காமில் பதுங்கி இருப்​ப​தாக உளவுத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து இந்திய ராணுவத்​தின் 15 சினார் படைப் பிரிவு, காஷ்மீர் போலீஸார் மற்​றும் சிஆர்​பிஎப் படை​யினர் அடங்​கிய பாதுகாப்புப் படை​யினர் நேற்​று​முன்​தினம் இரவு குர்​வெத் கலான் பகு​தியை சுற்றி வளைத்து தேடு​தல் வேட்​டை​யில் இறங்​கினர்.

அப்​போது மறைந்​திருந்த தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்டுள்ளனர். பதி​லுக்கு பாது​காப்​புப் படை​யினரும் துப்பாக்கியால் சுட்​டுள்​ளனர். இந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் மூஸா உயி​ரிழந்​தார். சம்பவ இடத்​திலிருந்து ஏகே-47 துப்​பாக்​கி மற்​றும் மொபைல் போன் ஆகியவை கைப்​பற்​றப்​பட்​டன. ஆசிப்ஃபவுஜி, சுலை​மான் என்ற பெயர்​களி​லும் அறியப்​பட்ட மூஸா, பாகிஸ்​தான்​ நாட்​டைச்​ சேர்​ந்​தவர்​ ஆ​வார்​.

SCROLL FOR NEXT