இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் பல பகுதிகளில் காவல் துறையும் அசாம் ரைபில்ஸ் படையும் இணைந்து நேற்று சோதனையில் ஈடுபட்டன. இதில் மேற்கு இம்பால் மாவட்டம், லோக்டாக் ஏரிக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
இதுபோல் சுராசந்த்பூர் மாவட்டம் காட்டுப் பகுதியில் இருந்து ஆயுதக் குவியலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதில் பல்வேறு ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 5 கையெறி குண்டு, வாக்கி- டாக்கிகள், மார்புக் கவசப் பைகள், தலைக் கவசங்கள் உள்ளிட்டவை இருந்தன. மற்றொரு நடவடிக்கையில் இரு துப்பாக்கிகளுடன் ஒருவரை கைது செய்தனர்.