இந்தியா

பிரம்மோற்சவ விழாவில் தடையின்றி லட்டு பிரசாதம்: திருப்பதி தேவஸ்​தான நிர்வாக அதிகாரி தகவல்

என். மகேஷ்குமார்

திரு​மலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வரும் செப்டம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை வரு​டாந்​திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 12 முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா​வும் நடை​பெற உள்​ளன. இதற்கான ஏற்​பாடு​கள் திருமலை, திருப்பதி​யில் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்திரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்​ரி, திருப்​பதி மாவட்ட ஆட்​சி​யர் வெங்​கடேஸ்​வர், எஸ்பி சுப்​பு​ரா​யுடு மற்​றும் தேவஸ்​தான அதி​காரி​கள் நேற்று விழா ஏற்​பாடு​களை ஆய்வு செய்​தனர். திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நிர்​வாக அதி​காரி எம்​.ர​விசந்​திரா தலை​மை​யில் தேவஸ்தானத்தின் அனைத்து துறை அதி​காரி​களின் ஆலோசனைக் கூட்​டம் நடந்​தது.

அப்​போது ரவிசந்​திரா பேசி​ய​தாவது: இந்த ஆண்டு 2 பிரம்​மோற்​சவங்​கள் நடை​பெற உள்​ளன. இந்த விழாக்​களில் பக்​தர்​களுக்கு தடை​யின்றி லட்டு பிர​சாதங்​கள் வழங்​கப்​படும். அதாவது பிரம்​மோற்சவ நாட்​களில் தின​மும் 10 லட்​சம் லட்டு பிர​சாதங்​கள் நிலு​வை​யில் இருக்​கும். கருட சேவையன்று கூட்​டத்​தைக் கட்டுப்படுத்து​வதுடன் அனை​வரும் சுவாமியை வழிபட ஏற்​பாடு செய்ய வேண்​டும்.

திருப்​பதி - திரு​மலை இடையே கூடு​தலாக அரசு பேருந்​துகளை இயக்க வேண்​டும். திரு​மலை​யின் அனைத்து இடங்​களி​லும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து இலவச உணவு வழங்​கப்பட வேண்​டும். குடிநீர், கழிப்​பறை வசதி​களை மேற்​கொள்ள வேண்டும். தற்​காலிக கழிப்​பறை​களை அமைக்க வேண்​டும்.

ரதசப்​தமியன்று ஒரே நாளில் 3.75 லட்​சம் பக்​தர்​கள் வாகன சேவைகளை கண்டு களித்​தனர். அதே​போல் பிரம்​மோற்சவ விழாவும் ஒரு சவாலாகவே இருக்​கும். எந்த ஒரு குறை​யும் இன்றி பிரம்​மோற்சவ விழாவை சிறப்​பாக நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT