கேரள முதல்வர் பினராயி விஜயன் 
இந்தியா

உரையின் முக்கிய பகுதிகளை படிக்கவில்லை: கேரள ஆளுநர் மீது பினராயி விஜயன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: ஆளுநர் உரை​யின் முக்​கிய பகு​தி​களை படிக்​காமல் தவிர்த்து விட்​டார் ஆளுநர் ராஜேந்​திர அர்​லேக்​கர் என்று கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் குற்​றச்​சாட்டு தெரி​வித்​துள்​ளார்.

கேரள சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. ஆண்​டின் முதல் கூட்​டம் என்​ப​தால் வழக்​க​மாக ஆளுநர் உரை​யுடன் கூட்​டம் தொடங்​கும். மாநில அரசு தயாரித்து தரும் உரையை ஆளுநர் அப்​படியே வாசிக்க வேண்​டும் என்​பது மரபு.

          

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற பேர​வைக் கூட்​டத்​துக்கு ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேக்​கர் வருகை தந்​தார். பேரவை மண்​டபத்​துக்கு வந்த கேரள மாநில ஆளுநர் ராஜேந்​திர அர்​லேக்​கர் பேர​வை​யில் உரையை வாசித்​தார். அப்​போது உரை​யில் இடம்​பெற்​றிருந்த சில பகு​தி​களை வாசிக்​காமல் தவிர்த்​து​விட்​டார்.

இதுதொடர்​பாக முதல்​வர் பின​ராயி விஜயன் கூறிய​தாவது: கேரள ஆளுநர் ராஜேந்​திர அர்​லேக்​கர், 12-வது பத்​தி​யின் முதல் பகு​தியை வாசிக்​க​வில்லை அல்​லது 15-வது பத்​தி​யின் கடைசி பகு​தியை முடிக்​க​வில்​லை. 72 பக்​கம் கொண்ட கேரள மாநில கொள்கை உரை​யில் 157 பத்​தி​களில் 16-வது பத்​தியை இணைத்து வாசித்​துள்​ளார். மத்​திய அரசு நிதி வழங்​காதது மற்​றும் மாநில அரசால் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்​காதது போன்​றவற்றை அவர் தவிர்த்​துள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

ஆளுநர் மாளிகை விளக்​கம்: இதுதொடர்​பாக ஆளுநர் மாளிகை விளக்​கம் அளித்து வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பேர​வை​யில் ஆளுநர் வாசிக்க வேண்​டிய உரை ஆளுநர் மாளி​கைக்கு வந்​த​போது அதில் சில பகு​தி​களில் தவறாக உள்​ள​தாக​வும், தேவை​யில்​லாத, உண்​மை​யில்​லாத சில விஷ​யங்​கள் அதில் உள்​ள​தாக​வும், அதை நீக்​க வேண்​டும் என்​றும் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து திருத்​தப்​பட்ட உரை என்று ஆளுநர் மாளி​கைக்கு அரசு சார்​பில் அனுப்​பப்​பட்​டது. ஆனால் ஆளுநர் மாளிகை கூறிய விஷ​யங்​கள் உரையி​லிருந்து நீக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டிருந்​தன.

SCROLL FOR NEXT