இந்தியா

சோனியா, ராகுலுடன் கேரள முதல்வர் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேரள முதல்​வ​ராக பதவி​யேற்ற பிறகு வி.டி.சதீசன் முதல் முறை​யாக டெல்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்​லி​கார்​ஜுன கார்கே உள்​ளிட்ட காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை சந்​தித்து பேசி​னார்.

கேரளா​வில் சமீபத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில், காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வெற்றி பெற்று 10 ஆண்​டுகளுக்​குப் பிறகு மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது. முதல்​வ​ராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்​றார்.

இந்​நிலை​யில் முதல்​வ​ராக பதவி​யேற்ற பிறகு முதல் முறை​யாக வி.டி.சதீசன் நேற்று முன்​தினம் இரவு டெல்லி வந்​தார். அவர் நள்ளிர​வில் டெல்லி வந்​தா​லும் காங்​கிரஸ் தொண்​டர்​கள் மற்​றும் ஆதர​வாளர்​கள் ஏராள​மானோர் டெல்​லி​யில் உள்ள கேரளா இல்லத்​தில் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

வி.டி.சதீசன் நேற்று சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, மல்லிகார்ஜுன கார்​கே. கே.சி.வேணுகோ​பால், பிரி​யங்கா காந்தி உள்​ளிட்ட காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை சந்​தித்​துப் பேசி​னார்.

கேரள சட்​டப்​பேரவை தேர்​தலில் தனக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்த மேலிடத் தலை​வர்​களுக்கு சதீசன் நன்றி தெரி​வித்​துக் கொண்​டார். மேலும் இந்த சந்​திப்​பில் கட்​சி​யின் அமைப்பு ரீதியான விஷ​யங்​கள் மற்​றும் புதிய கேரள அரசின் செயல்​பாடு​கள் குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன.

கேரளா​வில் கட்​சிக்கு புதிய மாநிலத் தலை​வரை நியமிப்​பது குறித்து காங்​கிரஸ் கட்​சிக்​குள் ஆலோ​சனை​கள் நடந்து வரும் வேளை​யில் இந்த சந்​திப்பு நிகழ்ந்​துள்​ளது. சதீசன் வரும் வாரத்தில் பிரதமர் மோடியை சந்​திக்​க வாய்ப்​புள்​ள​தாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT