புதுடெல்லி: கேரள மாநிலம், கொச்சியில் ஹுப்புல் ரசூல் மாநாட்டில், சன்னி பிரிவு மதகுருவும், இந்தியாவின் கிராண்ட் முஃப்தியுமான காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் பேசும்போது, “பெண்கள் தங்களது வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் பொது வெளிக்கு வரக்கூடாது” என்றார்.
இதுகுறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறியதாவது: பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அபூபக்கரின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்கவில்லை. இஸ்லாம்கூட, பெண்களை வீட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறவில்லை. வளர்ச்சியடைந்து வரும் கேரளத்துக்கு இது பொருத்தமான நிலைப்பாடு அல்ல.
இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் அளவுக்கு இது 19-ம் நூற்றாண்டு அல்ல. சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் பெண்களும் இணைந்து செயல்பட வேண்டும். இதுதான் எங்களது நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.