கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்முவின் ரியாஸியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பதிண்டி பகுதியில் வசித்து வந்தார். சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் ஆன்லைன் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கத்தினருடன் அந்த இளைஞர் மொபைல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். அவரிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கைதான அந்த இளைஞர் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 113 (3) (தீவிரவாத நடவடிக்கைகள்) கீழ் முதல் தகவல் அறிக்கை பாஹு போர்ட் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.