ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 4-ம் ஆண்டு லாவெண்டர் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு லாவெண்டர் பூ விவசாயத்தை தொடங்கிய போது, இதில் பங்கெடுக்க மக்கள் முன்வரவில்லை. இத்திட்டம் பலன் அளிக்கவில்லை என்றால் நிலங்களை திருப்பித்தருவதாக உறுதியளித்தோம்.
தற்போது இங்கு லாவெண்டர் பூ சாகுபடி மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். ஏற்றுமதியும் செய்கின்றனர். 12-ம் வகுப்பைக் கூட முடிக்காதவர்கள் எல்லாம் தற்போது லாவெண்டர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். லாவெண்டர் பூ சாகுபடி மற்றும் வாசனை திரவிய உற்பத்தியின் தேசிய மையமாக காஷ்மீர் மாறியுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.