பணி​யிடை நீக்​கம் செய்யப்பட்ட கர்​நாடகா அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத் தலை​வர் சிவசங்​கரப்பா சஹுகர்

 
இந்தியா

சட்டவிரோதமாக மகளுக்கு அரசுப் பணி தந்த தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடகா அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத் தலை​வர் சிவசங்​கரப்பா சஹுகர், தனது மகள் சுமாவுக்​குச் சட்​ட​விரோத​மாக போலி சாதிச் சான்​றிதழை சமர்ப்​பித்து அரசு வேலை பெற்​றுத் தந்​த​தாக கடந்த ஜனவரி​யில் புகார் எழுந்​தது.

சஹூகர் லட்​சக் ​கணக்​கில் ஊதி​யம் பெற்று வரும் நிலை​யில், அவரது குடும்​பத்​தின் ஆண்டு வரு​மானம் வெறும் ரூ.40 ஆயிரம் மட்​டுமே எனக் குறிப்​பிட்​டு, கிரீமி லேயர் வரம்பை தளர்த்​தி, போலி வரு​மானச் சான்​றிதழை அவரது மகள் சமர்ப்​பித்​தது விசாரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அதி​கார துஷ்பிரயோகம் செய்த சிவசங்​கரப்பா சஹுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு, அம்​மாநில ஆளுநர் தாவர்​சந்த் கெலாட்​டுக்கு முறைப்​படி கடிதம் அனுப்​பப்​பட்​டது.

இதுகுறித்து விரி​வான ஆய்வு மேற்​கொண்ட ஆளுநர் தாவர்​சந்த் கெலாட் நேற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், “சிவசங்​கரப்பா சஹுகர் மீதான புகார்​களுக்​குப் போதிய முகாந்​திரம் இருப்​பது முதற்​கட்ட ஆய்​வில் தெரிய​ வந்​துள்​ளது. எனவே, அவர் உடனடியாகப் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​படு​கிறார்.

இக்​குற்​றச்​சாட்​டு​கள் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​து வதற்கு ஏது​வாக, இந்​திய அரசி​யலமைப்பு 317 (1) பிரி​வின் கீழ், உச்ச நீதி​மன்​றத்​துக்​குப் பரிந்​துரைக்க குடியரசுத் தலை​வரின்​ கவனத்​திற்​கு அனுப்​பி வைக்​கப்​படு​கிறது” என குறிப்​பிட்​டு உள்ளார்​.

SCROLL FOR NEXT