சந்தேகத்தைக் கிளப்பிய புதிய காலணி.

 
இந்தியா

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக வனப்​பகு​தி​யில் 3 தமி​ழர்​களும் அரு​கில் இருந்து சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளனர் என்று பிரேதப் பரி​சோதனை அறிக்​கை​யில் தெரிய வந்​துள்​ளது. இதனால் இந்த வழக்கை சிஐடி விசா​ரணைக்கு மாற்றி கர்​நாடக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதி​காலை​யில் அந்​தோணி​சாமி (50), ஜான் ரோஸ் பீட்​டர் (42), லாசர் டேவிட் குமார் (33) ஆகிய மூவ​ரும் வனத்​துறை​யின​ரால் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். இந்​தச் சம்​பவத்​தைக் கண்​டித்து ஹனூரில் பாதிக்​கப்​பட்​டோரின் உறவினர்​களும், கிரா​மத்​தினரும் போராட்​டத்​தில் குதித்​த​தால் பதற்​றம் ஏற்​பட்​டது.

இதையடுத்து வனத்​துறை நிர்​வாகம், ‘மான் வேட்​டை​யாட சென்ற மூவ​ரும் வனத்​துறை​யினர் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். தங்​கள் உயிரைக் காப்​பாற்றி கொள்​வதற்​காக வனத்​துறை​யினர் திருப்பி சுட்​ட​தால் மூவ​ரும் உயி​ரிழந்​தனர்’ என்று தெரி​வித்​தனர். இதை உறவினர்​கள் ஏற்​க​வில்​லை. இந்​தச் சம்​பவத்​துக்குத் தமிழக முதல்​வர் விஜய், முன்​னாள் முதல்​வர்​கள் மு.க.ஸ்​டா​லின், எடப்​பாடி பழனி​சாமி உள்​ளிட்ட தமிழக அரசி​யல் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து விசா​ரணை நடத்த கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் உத்​தர​விட்​டார். அதன்​பின், வனத்​துறை​யினர் 7 பேர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

‘பு​திய காலணி’ - இதற்​கிடை​யில் 3 பேர் சுட்​டுக்கொல்​லப்​பட்ட ஷாக்யா வனப்​பகு​தி​யில், கொள்​ளே​கால் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலை​மை​யில் போலீ​ஸாரும், வனத்​துறை அதி​காரி​களும் ஆய்வு மேற்​கொண்​டனர்.

அங்கு சிதறிக் கிடந்த பொருட்​களைச் சேகரித்​தனர். வனத்​துறை ஊழியர்​கள் ஷிவ​ராஜ், சேகரை​யா, அனில்​கு​மார் உள்​ளிட்ட 7 பேரை​யும், இந்த துப்​பாக்​கிச் சூட்​டில் உயிர்த் தப்​பிய மகிமை தாஸை​யும் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா விசா​ரித்​தார்.

மேலும், கொல்​லப்​பட்ட 3 பேரிட‌ம் இருந்து 2 நாட்​டுத் துப்​பாக்​கி​கள், 3 கத்​தி​கள், 2 செல்​போன்​கள், கட்​டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர், 2 பைகள், வெங்​கா​யம், தக்​காளி, சமையல் பாத்​திரங்​கள், 2 பைகளில் மான் இறைச்​சி, ஒரு ஜோடி ஹவாய் செருப்பு ஆகிய​வற்றை கைப்​பற்​றிய​தாக வனத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஆனால், வனத்​துறை வெளி​யிட்ட புகைப்​படத்​தில் இடம்​பெற்ற, ஸ்டிக்​கர் பிரிக்​காத புதிய காலணி பலத்த சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. அந்​தோணி​சாமி​யின் மனைவி லூர்​து​ மேரி, ‘இர​வெல்​லாம் காட்​டில் அலைந்​தவரின் செருப்​பில் மண் கூட ஒட்டி இருக்​கா​தா?’ என்று கேள்வி எழுப்​பி​னார்.

ஜான்ரோஸ் பீட்டர், லாசர் குமார், அந்தோணிசாமி

நேரடி சாட்​சி​யம்: இந்த வழக்​கின் நேரடி சாட்​சி​யான மகிமை தாஸ், “வனத்​துறை​யினர் மிக​வும் அரு​கில் இருந்து துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். மலைப் பகு​தி​யில் இருந்து கீழே குதித்து உயிர் தப்​பினேன். என்னை வனத்​துறை​யினர் விசா​ரணைக்கு அழைத்​து, சாட்சி சொல்ல வைக்க முயற்​சிக்​கின்​ற​னர். அவர்​கள் சொல்​வதைப் போல சொல்​லா​விட்​டால், என்னை வழக்​கில் சிக்க வைத்து விடு​வார்​களோ என்று அச்​ச​மாக இருக்​கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்​கிறது” என்று வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்​தார்.

இந்​தச் சூழ்​நிலை​யில், கொல்​லப்​பட்ட 3 பேரின் பிரேதப் பரி​சோதனை கடந்த 16-ம் தேதி மைசூரு​வில் உள்ள கே.ஆர். அரசு மருத்​து​வ​மனை​யில் நடத்​தப்​பட்​டது. பிரேதப் பரி​சோதனை அறிக்​கை​யில், “இறந்த 3 பேரும், 10 அடிக்குக் குறை​வான தூர‌த்​தில் இருந்து சுடப்​பட்​டுள்​ளனர்.

ஜான் ரோஸ் பீட்​டரின் இடது காது பகு​தி​யில் இருந்து மார்பு பகுதி வரை சுமார் 28 செ.மீ. நீளத்​துக்கு ஆழமான காயம் ஏற்​பட்​டுள்​ளது. அந்​தோணி​சாமி, லாசர் டேவிட் குமார் ஆகி​யோரின் வலது மார்​பு, தொடை ஆகிய இடங்​களில் ப‌லத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது.

லாசட் டேவிட் குமார் உடலில் வல‌து மார்​புப் பகு​தி​யில் 8.5 செ.மீ. வலது தொடை​யில் 13 செ.மீ. ஆழத்​துக்​குக் காயம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் மிக அரு​காமை​யில் இருந்து சுடப்​பட்​டது உறு​தி​யாகிறது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கர்​நாடக காவல் துறை தலைமை இயக்​குநர் மற்​றும் காவல் துறை இன்​ஸ்​பெக்​டர் ஜெனரல் (டிஜி அண்ட் ஐஜிபி) சலீம், “மூன்று பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்ட வழக்கு சிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​படு​கிறது” என்று நேற்று உத்​தர​விட்​டார். இதையடுத்து துணை காவல் ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலை​மையி​லான விசா​ரணைக் குழு​வின் அறிக்​கை​கள் சிஐடி போலீ​ஸாருக்கு அனுப்ப, சாம்​ராஜ் ந‌கர் காவல் கண்​காணிப்​பாளருக்கு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT